Latest News :

தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ்டென்பின் பவுலிங் தொடர் 2025 - டெல்லி ஷார்க்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது

0b9d492d029a47543fc2ea85aa6692d3.jpeg

DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ்டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைகைப்பற்றியது. இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம்(TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின்(Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.

 

இறுதி ஆட்டம் “பேக்கர் வடிவத்தில் (Baker Format)” நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்தபின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லிஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம்வென்றனர்.

 

முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால்இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ்அணி வெற்றியை உறுதிசெய்தது!

 

அரையிறுதி 1:

 

ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

 

அரையிறுதி 2:

 

டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ்(ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது.இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.

 

சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காகசிறப்பு பரிசை வென்றது.


Recent Gallery