Latest News :

அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

718d59bb52db18cdcfd4633d039388f4.jpg

Casting : Rajin, Aarshitha

Directed By : Nagarajan

Music By : Rajin Mahadev

Produced By : Rapheal Saldhana

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த ஒரு மாதமாக புதிய திரைப்படங்கள் வெளியாகததால் சினிமா ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள். அப்படிப்பட்டவர்களை எண்டர்டெய்ன் பன்னுவதற்காகவே மீண்டும் ரிலிஸாகியிருக்கிறது ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ திரைப்படம்.

 

அறிமுக நடிகர்கள் நடித்திருக்கும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானாலும், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உள்ளிட்ட சில காரணங்களால் ரசிகர்களின் பார்வையில் படமாலே திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால், படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டினார்கள். அதன் காரணமாகவே, தற்போது இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். சரி கதைக்கு வருவோம்.

 

கதை என்றால் வித்தியாசமாக எதுவும் இல்லை. வட சென்னை தான் கதைக்களம். அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு, வெட்டியாக ஊர் சுற்றும் ஹீரோ ரஜின் சுரேஷ், ஹீரோயின் ஆர்ஷிதாவை கண்டதும் காதல் கொள்கிறார். தனது காதல் வலையில் ஆர்ஷிதாவை விழ வைக்க அவரை பின் தொடர்வதையே வேலையாக செய்தாலும், ரஜினின் நடவடிக்கையும், அவரையும் பிடிக்காத ஆர்ஷிதா, போலீஸ், தாதா என்று பலவிதத்தில் ரஜினுக்கு மிரட்டல் விடுக்கிறார். எதுவும் வேலைக்காமல் போக ஒரு கட்டத்தில், ரஜினின் அப்பாவிடமும் புகார் தெரிவிக்க, ரஜின் தனது காதல் தொல்லையை நிறுத்தாமல், தொடர்ந்து ஆர்ஷிதாவுக்கு அன்பு தொல்லைக் கொடுக்க, இறுதியில் ரஜின் காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

ஒன்சைட் லவ் ஸ்டோரி என்ற சாதாரண கான்சப்ட்டை வைத்துக்கொண்டு இயக்குநர் நாகராஜ், முழுப்படத்தையும் ஜாலியாக நகர்த்தி செல்கிறார்.

 

அறிமுக நாயகனான ரஜின் சுரேஷ், தனது வெகுளித்தனமான நடிப்பால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிடுகிறார். அப்பாவிடம் எப்படிப்பட்ட திட்டு வாங்கினாலும் அதை உதாசினப்படுத்திவிட்டு தனது கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் ரஜினுக்கு காதல் வந்தவுடன் அவர் செய்யும் அளப்பறைகள் அனைத்தும் சிரிப்பு வெடியாக வெடிக்கிறது.

 

ஹீரோயின் ஆர்ஷிதாவை சுற்றி கதை நகர்ந்தாலும், குறைவான காட்சிகளில் தான் வருகிறார். இருந்தாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது.

 

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் பட்டிமன்ற ராஜா, அம்மாவாக நடித்திருக்கும் ரேகா, ஹீரோவின் நண்பர்கள் என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் எதாவது ஒரு வகையில் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஹீரோவின் நண்பர்களின் நடிப்பு சில இடங்களில் ஓவராக இருந்தாலும், அவை நகைச்சுவைக்காக தான் என்பதால் அதை அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

 

படத்தில் நகைச்சுவை எந்த அளவுக்கு தூக்கலாக இருக்கிறதோ அதே அளவுக்கு பாடல்களும் செம. இசையமைப்பாளர் ரஜின் மகாதேவின் இசையில் அனைத்து பாடல்களும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. இரண்டு கானா பாடல்கள், இரண்டு மெலொடி பாடல்கள் என்று அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, சொல்ல வந்த விஷயத்தை எந்தவித குழப்பமும் இன்றி நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

 

படம் பார்க்க வரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து பிரச்சினைகளையும் மறந்துவிட்டு சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் வடிவைத்திருக்கும் இயக்குநர் நாகராஜன், அதில் ஜெயித்ததுடன், “எங்கிருந்தோ வந்து சென்னையில் பிழைப்பீங்க, ஆனா சென்னையில இருக்குறவங்களுக்கு வேலை கொடுக்க மாட்டீங்க”, என்று தனது வசனத்தின் மூலம் சென்னை மக்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர், இப்படி பல இடங்களில் தனது வசனங்களுக்காகவும் அப்ளாஷ் வாங்கிவிடுகிறார்.

 

தற்போதைய சினிமா டிரெண்டில், ஒரு இடத்தில் கூட டபுள் மீனிங் வசனங்கள் இல்லாமல், படம் முழுவதும் காமெடிக் காட்சிகள் இருக்கும் படம் என்றால் அது இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தான். அதற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

 

மொத்தத்தில், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த, ஹிட் பாடல்களைக் கொண்ட இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்