Latest News :

‘கம்பி கட்ன கதை’ திரைப்பட விமர்சனம்

8e91ae93a6ca45752a9388a5aa47d50f.jpg

Casting : Natty Natarajan, Mukesh Ravi, Shree Ranjani, Shalini, Singam Puli, Chams, Kothandam

Directed By : Rajanathan Periyasamy

Music By : Sathish Selvam

Produced By : Mangatha Movies - Ravi

 

மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழும் நாயகன் நட்டி நட்ராஜ், பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார். அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால் அசால்டாக நடித்திருக்கிறார். நடிக்கும் வாய்ப்பை விட, பேசும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், நட்டி நட்ராஜ் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்.

 

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

 

நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கமர்ஷியல் அம்சங்களாக வலம் வருகிறார்கள்.

 

சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் அடங்கிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டணியின் காமெடி காட்சிகளால் சிரிக்க முடியவில்லை.

 

ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் ஆகியோரது பணி குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் ராஜநாதன் பெரியசாமி, போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை மையமாக வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது முயற்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

 

படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, எந்த ஒரு இடத்திலும் பார்வையாளர்களால் சிரிக்க முடியவில்லை. 

 

மொத்தத்தில், ‘கம்பி கட்ன கதை’ பார்வையாளர்களை கடுப்பேத்தும் படம்.

 

ரேட்டிங் 2/5

Recent Gallery