Latest News :

‘பருத்தி’ திரைப்பட விமர்சனம்

0a5a1cc5cc117465134b3f729924a83e.jpg

Casting : Sonia Agaral, Kutty Puli Saravana Shakthi, Dilips, Varshitta, Suganya

Directed By : Guru.A

Music By : Ranjith Vasudevan

Produced By : Kodanda & Co, Latchu Ganesh

 

கணவரை இழந்த சோனியா அகர்வால், ஊருக்கு வெளியே இருக்கும் தனது உறவினர் வீட்டில் வசிக்கிறார். விவசாய கூலி வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தும் அவருக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. மறுபக்கம்,  பெற்றோர் முகத்தை கூட பார்க்காத சிறுவன் திலிப்ஸ், தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார். அவரிடம் அன்பும், அக்கறையும் காட்டும் அவரது பள்ளி வகுப்பு தோழி வர்ஷிட்டாவின் நட்பு மட்டுமே அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

இதற்கிடையே, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை இளம் வயதிலேயே சந்திக்கும் திலிப்ஸ் மனதளவில் பாதிக்கப்படுகிறார். அதே நேரத்தில், அவரது அம்மா தான் சோனியா அகர்வால் என்ற உண்மை தெரிய வருகிறது. சோனியா அகர்வால் தனது மகனை பிரிந்து வாழ்வது ஏன் ?, சாதி ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படும் சிறுவன் திலிப்ஸ் அதில் இருந்து மீண்டாரா? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் ‘பருத்தி’ படத்தின் மீதிக்கதை.

 

சோனியா அகர்வால், விவசாய கூலித்தொழிலாளி கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பது புதிதாக இருந்தாலும், அவர் கதாபாத்திரத்தையும், அவரது நடிப்பையும் புகழக்கூடிய விசயங்கள் எதுவும் படத்தில் இல்லாதது பெரும் ஏமாற்றம்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திலிப்ஸ், தன்னிடம் இருக்கும் மொத்த வித்தையையும் வெளிக்காட்டி நடிப்பு கடலில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் சில இடங்களில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

சிறுமி வர்ஷிட்ட, சுகண்யா, குட்டிப்புலி சரவணன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வேலையை சொதப்பாமல் செய்திருக்கிறார்கள்.

 

ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு அடையாளமாக பயனித்து பார்வையாளர்களை கவர்கிறது.

 

ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், கதாபாத்திரங்களின் இயல்பு தன்மையையும் குறையின்றி படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வம், இயக்குநர் சொன்னதை செய்திருந்தாலும், திரைக்கதை மூலம் அவர் சொல்ல முயற்சித்ததை கொஞ்சம் புரியும்படியும் சொல்லியிருக்கலாம்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஏ.குரு, தாய் - மகன் உறவை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருப்பதோடு, சமூகத்தில் நிலவும் சாதி பாகுபாடு மற்றும் சாதியை உயர்த்தி பிடித்து உலவும் மனிதர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். 

 

இயக்குநர் ஏ.குருவின், முயற்சி மற்றும் சிந்தனை பாராட்டும்படி இருந்தாலும், அதை சரியான முறையில் சொல்ல தவறியிருப்பதோடு, தான் சொல்ல நினைத்த கருத்துகளை ஒரு திரைப்படமாக கொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘பருத்தி’ பாதிக்கவில்லை.

 

ரேட்டிங் 2/5

Recent Gallery