Latest News :

’காக்கா’ திரைப்பட விமர்சனம்

956c1cdd2872e39613d33991b02add10.jpg

Casting : Inico Prabakar , Rosmin, Sendrayan, Dhanya, Theni K. Paraman, Munishkanth, Appukutty, Cool Suresh, Manimegalai, Kottachi, Mosakutty, King kong

Directed By : Theni K.Paraman

Music By : Kevin D' Costa

Produced By : Aaren Pictures - Renuka Krishnasamy

 

குடும்ப பிரச்சனை காரணமாக நாயகி ரோஷ்மின் குடும்பம் மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்கிறார்கள். சென்னையில் சில பல கூலி வேலைகள் செய்து வாழும் செண்ட்ராயன், ரோஷ்மின் தங்கை தன்யா மீது காதல் கொள்கிறார். படிப்பு, சரியான வேலை உள்ளிட்ட எந்த தகுதியும் இல்லாத செண்ட்ராயனை நிராகரிப்பதற்காக, தனது அக்காவின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை, அதன் காரணமாக மதுரையில் இருந்து சென்னை வந்தது உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளை சொல்லும் தன்யா, அந்த பிரச்சனைகள் முடிந்தால் மட்டுமே காதல், கல்யாணம் பற்றி தான் யோசிக்க முடியும், என்கிறார்.

 

தன்யாவின் குடும்ப பிரச்சனை முடிந்தால், அவர் தன்னை காதலிப்பார், என்ற நம்பிக்கையில் நாயகி ரோஷ்மினின் திருமண பிரச்சனையை தீர்த்து வைக்க களத்தில் இறங்கும் செண்ட்ராயனால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. அந்த குழப்பங்களுக்கு நடுவே செண்ட்ராயன் தன் காதலை வளர்க்க, மறுபக்கம் நாயகி ரோஷ்மின், இனிகோ பிரபாகரனுடன் நட்பாக பழக தொடங்கி காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இதற்கிடையே, ஏற்கனவே ரோஷ்மினுக்கு நிச்சயம் செய்யப்பட்ட தேனி கே.பரமன், ரோஷ்மினை தேடி சென்னைக்கு வருகிறார். 

 

இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் யார் யார் காதல் கைகூடியது, யார் யாரை திருமணம் செய்தார்கள், என்பதை கலகலப்பாக சொல்வதே ‘காக்கா’ படத்தின் கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், திரைக்கதையின் மையப்புள்ளியாக பயணிக்கவில்லை என்றாலும், இரண்டாம் பாதி படம் முழுவதிலும் பயணித்து தனது முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கிறார். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரத்திற்கு தனது அளவான நடிப்பு மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மிஸ் மலபார் பட்டம் பெற்ற ரோஷ்மின், பக்கத்து வீட்டு பெண் போல் இருந்தாலும், பார்த்ததும் பிடித்துப்போகும் எளிமையான அழகோடு இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.

 

காமெடி நடிகரான செண்ட்ராயனுக்கு இரண்டாவது ஹீரோ என்ற புரோமோஷன் கிடைத்திருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தி தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

 

நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் தன்யா, துறுதுறு நடிப்பின் மூலம் கவர்கிறார். 

 

பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் தேனி கே.பரமன், காமெடி கலந்த வில்லனாக பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

 

முனீஷ்காந்த், அப்புக்குட்டி, கூல் சுரேஷ், மணிமேகலை, கொட்டாச்சி, மொசக்குட்டி, கிங்காங் என அனைத்து காமெடி நடிகர்களும் தங்கள் பங்கிற்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் மதுரை மற்றும் சென்னையை பருந்து பார்வையில் படமாக்கி ரசிக்க வைத்திருப்பதோடு, நாயகியை அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். 

 

கெவின் டி.கோஸ்டாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கும், கலகலப்பான காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

காதல் நகைச்சுவை படத்தை சரியான முறையில் படத்தொகுப்பு செய்து ரசிக்க வைத்திருக்கும் ஷஜித், காட்சிகளை சுருக்கமாக சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் தேனி கே.பரமன், காதல் மற்றும் காமெடியை மையப்படுத்திய கதையை, சாதாரணமான முறையில் சொல்லியிருந்தாலும், அதை நகைச்சுவை உணர்வோடு சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். 

 

சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அந்த குறைகள் திரைக்கதை ஓட்டத்தை பாதிக்காத வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தேனி கே.பரமன், முழுமையான கமர்ஷியல் காமெடி படத்தை பார்த்த திருப்தியை பார்வையாளர்களுக்கு கொடுத்து பாராட்டு பெற்றுவிடுகிறார்.

 

மொத்தத்தில், ‘காக்கா’ கலகலப்பு பஞ்சமில்லை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery