Latest News :

’மிஸ்டர் சந்திரமெளலி’ விமர்சனம்

cd20ef79c9a8c6bdb8933463a2dd04bf.jpg

Casting : Karthik, Goutham Karthik, Regina Cassandra, Varalakshmi Sarathkumar

Directed By : Thiru

Music By : Sam CS

Produced By : G. Dhananjayan, S. Vikram Kumar, Lalitha Dhananjayan

 

கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படமான ‘மிஸ்டர் சந்திரமெளலி’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

பெரிய கால் டாக்ஸி நிறுவனத்தின் முதலாளியான இயக்குநர் மகேந்திரன், தன்னை பார்த்து அதே தொழிலுக்கு வந்த சந்தோஷ் பிரதிப்பீன் முன்னேற்றம் பிடிக்காமல், அவரது நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக அழிப்பதற்காக திட்டம் போட்டு காய் நகர்த்த, அதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுவதோடு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களும் நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் கெளதம் கார்த்திக்கும் பாதிக்கப்பட, பிறகு நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருப்பது தான் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மீதிக்கதை.

 

கார்ப்பரேட் உலகத்தின் தொழில் போட்டி, குத்துச்சண்டை வீரரின் போராட்டம், அப்பா - மகன் பாசம் என ஒரே படத்தில் பல கிளைக்கதைகளை வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் திரு, ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படத்தை அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்திருக்கிறார்.

 

ஆட்டம் பாட்டம் என்று அளவுக்கதிகமான துள்ளல் இல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கும் கெளதம் கார்த்திக், தனது கதாபாத்திரத்தை எந்தவித குறையும் இல்லாமல் கையாண்டிருக்கிறார். அவரை எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

ஜாலியான அப்பாவாக வரும் கார்த்திக்கின் வேடம் இந்த படத்தில் ரொம்பவே ஸ்பெஷல் என்றாலும், அந்த வேடத்தை காட்டிய விதம் என்னமோ ரொம்ப சாதரணமாகத் தான் இருக்கிறது. அவரது வேடத்தை பெரிதும் எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். 

 

ஹீரோயின் ரெஜினாவுக்கு இது ரொம்ப முக்கியமான படம். தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பவர், திரைக்கதைக்கு ஏற்ற நடிகையாக வலம் வருவதோடு, பாடல் காட்சிகளில் அழகான கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

Regina

 

வரலட்சுமி சரத்குமாரின் வேடம் சிறியது என்றாலும் ரொம்பவே லைவாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் ரெஜினாவையே மிஞ்சும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக மாறினாலும், அவர் கார்த்திக்கை என்னவாக பார்க்கிறார், என்பது ரசிகர்களுக்கு தெளிவாக சொல்லாததால், அந்த வேடத்தில் சற்று குழப்பமும் ஏற்படுகிறது.

 

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் இரண்டுமே ஒகே தான். பின்னணி இசையில் பல இடங்களில் மனுஷன் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமராவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இரண்டு அடிக்கு மேல் கண் பார்வை தெரியாத கெளதம் கார்த்திக், வில்லனை துரத்தும் டெக்னிக்கை ரொம்ப லாவகமாக கையாண்டிருப்பவர், பாடல் காட்சிகளில் வேறு ஒரு ஒளிப்பதிவை காட்டி அசத்துகிறார். 

 

படத்தின் ஆரம்பத்தில் பாஸ்ட் பீட் பாடலை தான் வைப்பார்கள், ஆனால் இயக்குநர் திருவோ மொலொடி பாடலை வைத்து அங்கேயே தனது வித்தியாச முயற்சியை காண்பித்து விடுவதோடு, அந்த பாடலை ஒன்ஸ்மோர் கேற்கும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார்.

 

ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை கொடுக்கும் இயக்குநர் திரு, இந்த படத்தில் ஆக்‌ஷனை குறைவாக வைத்துவிட்டு சஸ்பென்ஸை தூக்கலகாக வைத்திருக்கிறார்.

 

காதல், காமெடி, அப்பா - மகன் செண்டிமெண்ட் என்று முதல் பாதி ரெகுலரான பார்மட்டில் நகர்வது, திரைக்கதையின் வேகத்தை சற்று குறைத்தாலும், இரண்டாம் பாதியில் தொடங்கும் படம் அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் படு விறுவிறுப்பாக நகர்கிறது. அதிலும், இரண்டு அடி மட்டுமே தன்னால் பார்க்க முடியும் என்ற குறைபாடோடு கெளதம் கார்த்திக், வில்லனின் ஆளை துரத்துவதும், அதற்காக அவர் பயன்படுத்தும் டெக்னிக்கும் ரொம்பவே புதுசாக இருக்கிறது. அதே சமயம், கார்த்திக்கும், அவர் பயன்படுத்திய கார் மற்றும் அதனுடனான அவரது செண்டிமெண்ட் காட்சிகள் சற்று பழசாக இருக்கிறது.

 

மகேந்திரன் தனது அறிமுகத்திலேயே தன்னை பயங்கர வில்லனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நடித்திருப்பதோடு, தனது வார்த்தைகளையும் நடிக்க வைத்திருக்கிறார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு சந்தோஷ் பிரதீப்பின் வேடம் சஸ்பென்ஷாக அமைந்திருக்கிறது. 

 

கமர்ஷியலாக கதையை கையாண்டாலும் அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் போட்டியை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் திரு, அதனால் பாதிக்கப்படுவது யார்? என்பதையும் ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் வில்லன் யார்? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இயக்குநர் சஸ்பென்ஷை கையாண்டிருக்கிறார். இறுதியாக சஸ்பென்ஸ் ஓபன் ஆகும் போது கூட, அதை கெளதம் கார்த்திக் எப்படி கண்டுபிடித்தார், என்ற எதிர்ப்பார்ப்பு நம்மை சீட் நுனியில் உட்காரை வைக்கிறது.

 

இரண்டாம் பாதியில் தான் கதையே தொடங்குவது போல இருந்தாலும், அதற்கான லீடை முதல் பாதியின் ஆரம்பத்திலேயே இயக்குநர் கொடுத்தாலும், அதன் பிறகு வரும் காதல், செண்டிமெண்ட் போன்ற காட்சிகள் ரசிகர்களை சற்று டைவர்ட் செய்துவிடுகிறது. இருந்தாலும், இரண்டாம் பாதி தொடங்கியவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களின் பார்வையும் ஸ்கீரினைவிட்டு அகலவில்லை. அந்த அளவுக்கு படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘மிஸ்டர் சந்திரமெளலி’ பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த பர்பெக்ட் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உள்ளது. 

 

ரேட்டிங் 3/5