Latest News :

‘விஸ்வரூபம் 2’ விமர்சனம்

61705cc4acc1dd1de6c9f82c892e8aaf.jpg

Casting : Kamal Hassan, Pooja Kumar, Andrea, Rahul Bose, Shekhar Kapur

Directed By : Kamal Haasan

Music By : Ghibran

Produced By : Kamal Hassan

 

கமல்ஹாசன் இயக்கி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் என்றால் அது ‘விஸ்வரூபம்’ தான். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘விஸ்வரூபம் 2’ என்ற தலைப்பில் இயக்கி நடித்திருக்கும் கமல்ஹாசன், முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தில் ரசிகரகளை கவர்ந்தாரா இல்லையா என்பதை பார்ப்போம்.

 

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்த இருந்த நாசவேலையை தடுத்து நிறுத்தும் கமல்ஹாசன் மற்றும் குழுவினர், அங்கிருந்து இங்கிலாந்துக்கு வர, அங்கேயும் தீவிரவாதிகள் பெரிய அளவில் நாசவேலை செய்வதை கண்டுபிடிப்பதோடு, அதை தடுத்தும் நிறுத்துகிறார்கள். பிறகு இந்தியாவுக்கு வருபவர், அங்கேயும் தீவிரவாதிகளின் சதிதிட்டத்தை முறியடித்து நாட்டை காப்பாற்றுகிறார். அது என்ன சதித்திட்டம் அதை கமல்ஹாசன் மற்றும் அவரது குழுவினர் எப்படி முறியடிக்கிறார்கள், அமெரிக்காவில் இருந்து தப்பிக்கும் முக்கிய தீவிரவாதி என்ன ஆனார், என்பது தான் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் கதை.

 

அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் கமல்ஹாசனை, அவரது துறையை சார்ந்த மேல் அதிகாரி ஒருவரே கொலை செய்ய முயற்சிக்க அதில் இருந்து தப்பித்தவர், உயர் அதிகாரியை நெருங்கும் போது அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது பொருட்களை சோதனை செய்யும் போது, லண்டனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதிதிட்டம் நடத்தப்பதை கண்டுபிடிக்கும் கமல் அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்க, அவருக்கு உதவியாக அவரது மனைவி பூஜா குமாரும் ஈடுபடுகிறார். பிறகு லண்டனில் இருந்து கமல் குழுவினர் இந்தியாவுக்கு வர, அங்கே பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியாவை கடத்தும் தீவிரவாதிகள் அதன் மூலம் கமலை சிறைபிடித்து அவர் உடம்பில் வெடிகுண்டை கட்டிவிடுகிறார்கள்.

 

40 நொடிகளில் வெடிகுண்டு வெடிக்கும் நிலையில் இருக்க, அதில் இருந்து கமல் எப்படி தப்பித்து, தனது குழுவினரை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதோடு, இந்தியாவில் நடக்க இருக்கும் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

 

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம் 2’ இருந்தாலும், முதல் பாகத்தில் இருந்த அந்த சுவாரஸ்யமும் பிரமிப்பும் இரண்டாம் பாதியில் இல்லை என்பதே உண்மை. முதல் பாதியில் இருந்த பல விறுவிறுப்பான காட்சிகளை அவ்வபோது இதில் நமக்கு போட்டு காட்டும் கமல், இரண்டாம் பாகத்திற்காக அதுபோன்ற காட்சிகள் எதையும் எடுக்காமல் விட்டிருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

 

கமல்ஹாசனின் நடிப்பை பொருத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர் மட்டும் அல்ல அவருடன் நடிக்கும் அத்தனை கதாபாத்திரங்களும், ஏதோ நிஜமாகவே உளவுத்துறையில் பணிபுரிபவர்கள் போலவே தங்களது மேனசரித்தை வெளிப்படுத்தி நடிப்பில் அப்ளாஷ் வாங்குகிறார்கள். 

 

ஷானு வர்க்கீஸ் மற்றும் ஷாம்தாட் சைனுதீன் ஆகியோரது ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் ஒகே தான். அதேபோல், படத்தொகுப்பாளர்கள் மஹேஷ் நாராயணன், விஜய் சங்கர் ஆகியோர் முடிந்தவரை பழைய காட்சிகளை கோர்த்து ஒரு படமாக கொடுக்க பெரிய அளவில் முயற்சி செய்திருக்கிறார். 

 

அமெரிக்காவில் இருந்து கிளம்பும் கமல் நேராக இந்தியா வராமல் இங்கிலாந்து போகிறவர் அங்கே தீவிரவாதிகளின் சதிதிட்டத்தை முறியடித்துவிட்டு பிறகு இந்தியா வர, அங்கே நடக்கும் சதி திட்டத்தையும் முறியடிக்கிறார். இது தான் இந்த இரண்டாம் பாகத்தின் முக்கிய கரு என்றாலும், திரைக்கதை இதனை மையமாக வைத்து பயணிக்காமல் கமல்ஹாசனின் அம்மா, ராணுவத்தில் இருந்த ஆண்ட்ரியா, கமல்ஹாசன் எப்படி இந்திய உளவுத்துறையில் சேருகிறார்கள் போன்றவற்றை பேசுவதோடு, ஆப்கானிஸ்தானில் இருக்கும் போது அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகளை தாக்கும் போதும், அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை கமல் காப்பாற்றுவதோடு, முக்கிய தீவிரவாதியான ராகுல் போஸின் பிள்ளைகளை படிக்க வைப்பது என்று முதல் பாகம் ‘விஸ்வரூபம்’ படத்தின் நீளம் கருத்தி வெட்டிய காட்சிகளையே இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’-வாக கமல் கொடுத்திருக்கிறார்.

 

லண்டனில் நடக்கும் நாசவேலை, இந்தியாவில் நடக்கும் நாசவேலை போன்றவற்றை கமல் முறியடிக்கும் காட்சிகளில் பெரிய அளவில் சுவாரஸ்யமும் இல்லை விறுவிறுப்பும் இல்லை என்றாலும், மொத்தமாக ‘விஸ்வரூபம்’ என்ற படத்திற்கு கமல் பெரிய அளவில் உழைத்திருக்கிறார் என்பதை நம்மை உணரச்செய்கிறது. மேலும், லண்டனில் கமலை கொலை செய்ய முயற்சிக்கும் அந்த கார் அட்வென்சர் காட்சிக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

காட்சிகளில் சுவாரஸ்யங்கள் இல்லை என்றாலும் கமல் பேசும் பல அரசியல் வசனங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலும் உளவுத் துறை உயர் அதிகாரிகளாக வருபவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பது போல காட்டுவதும், அவர்களை நக்கலடித்து நையாண்டி செய்வதும், என்னதான் நாட்டுக்காக உயிரை கொடுத்து போராடினாலும், இஸ்லாமியர்களை இந்திய அரசின் உயர் அதிகாரிகள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதையும் ரொம்ப தைரியமாகவும் அழுத்தமாகவும் பேசியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசனுக்கு சல்யூட்.

 

இந்திய உளவுத்துறை அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் பணிபுரிகிறது, என்று பெரிய அளவில் முதல் பாகத்தில் கதை சொல்லிய கமல், இரண்டாம் பாகத்தையும் இங்கிலாந்து என்று பெரிய அளவில் கதை சொல்ல ஆரம்பித்து, பிறகு இந்தியா, தீவிரவாதிகளின் ஆள் கடத்தல், ஹீரோயிஷம் என்று சாதாரண கமர்ஷியல் படமாக முடிக்கிறார்.

 

பிரமிக்க வைக்க கூடிய காட்சிகள் சில படத்தில் இருந்தாலும், அவை கோர்வையாக இல்லாமல் ஏதோ துணிப்பது போல இருப்பதோடு, தீடீரென்று சம்மந்தம் இல்லாத சில காட்சிகளும், வசனங்களும் வந்து ஆடியன்ஸை கன்பியூஸ் பண்ணுகிறது.

 

மொத்தத்தில், முதல் பாகத்தில் வெட்டப்பட்டு வேஸ்டாக போக வேண்டிய காட்சிகளை ஒன்று சேர்த்து துட்டு பார்க்க நினைத்த கமல்ஹாசன், ’விஸ்வரூபம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பெற்ற மாபெரும் வெற்றியை அதன் தொடர்ச்சியான ‘விஸ்வரூபம் 2’ வில் இழந்துவிட்டார்.

 

ரேட்டிங் 2.5/5