Latest News :

’ஆட்கள் தேவை’ விமர்சனம்

30827de66e34a157cf39b81d430c9ff6.jpg

Casting : Shakthi Shivan, Anu, Maim Gopi, Sai Thina

Directed By : Shakthi Shivan

Music By : Karthik Raja

Produced By : Madhukumar Sellappan

 

பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கும்பலிடம் கதாநாயகி அனு சிக்கிக்கொள்ள அவர்களை கதாநாயகன் சக்தி சிவன், எப்படி காப்பாற்றுகிறார் என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஹீரோவாக நடித்திருக்கும் சக்தி சிவன் தான் படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டிலும் முத்திரை பதிக்கும் விதத்தில் பணியாற்றியிருக்கிறார். 

 

கதாநாயகியாக நடித்திருக்கும் அனு அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மைம் கோபி உள்ளிட்டவர்கள் தங்களது வேலைய சரியாக செய்திருக்கிறார்கள்.

 

கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக சக்தி சிவன், எடுக்கும் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தாலும், சில இடங்களில் லாஜிக் மீறல்களாகவும் இருக்கிறது.

 

கார்த்திக் ராஜாவின் இசையும், சுரேஷ்குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மறைப்பதால் தான் குற்றவாளிகள் தப்பிப்பதோடு, அந்த குற்றங்களை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள், என்ற சமூக கருத்தை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் சக்தி சிவனை பாராட்டியாக வேண்டும். அதே சமயம், ஹீரோ ஷக்தி சிவன், படம் முழுவதும் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதை சற்று தவிர்த்திருக்கலாம்.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் படத்திற்கு ’ஆட்கள் தேவை’ என்று எதனால் தலைப்பு வைத்தார் என்பது தான் புரியவில்லை.