Latest News :

‘பூம் பூம் காளை’ விமர்சனம்

c046a5e18a1f22660ffb7dcd55b402bd.jpg

Casting : kevin, Sara Deva, Appukutty, Sri, R.Sundarajan, Sachu, Abinaya

Directed By : RD Kushal Kumar

Music By : PR Srinath

Produced By : Olimara Cinemas

 

புதுமணத் தம்பதியான கெவின், சாரா தேவா தேனிலவுக்குச் செல்கிறார்கள். செல்லும் இடத்தில், இருவரும் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வோம், பிறகு தான் தாம்பத்திய உறவு, என்று சொல்லி, ஆசையாக இருந்த கெவினுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சாரா. சாராவின் கண்டிஷனுக்கு கட்டுப்பட்டாலும், தனது ஆசைகளை அடக்க முடியாமல் தவிக்கும் கெவின் என்ன செய்தார்? என்பதை நகைச்சுவையாகவும், நல்ல மெசஜோடும் சொல்லியிருக்கிறார்கள்.

 

அப்பாவித்தனமான தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் கெவின், நடனத்தில் கெட்டிக்காரராக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை.

 

நாயகி சாரா தேவா அம்சமாக இருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

அப்புக்குட்டி, காதல் அருண் ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு, டபுள் மீனிங் வசனங்கள் பேசி பதற வைக்கிறார்கள்.

 

ஆர்.சுந்தர்ராஜன், சச்சு ஆகியோரின் நடிப்பும், அவர்களுடைய கதாப்பாத்திரமும் கவர்கிறது. காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ அளவாக நடித்திருக்கிறார்.

 

கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவும், பி.ஆர்.ஸ்ரீகாந்தின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண பந்தங்கள் விரைவில் முறிந்து போவது எதனால்? என்பதை அலசியிருக்கும் இயக்குநர் ஆர்.டி.குஷால்குமார், அதற்கான தீர்வை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்று அதிகமாக யோசித்திருக்கும் இயக்குநர் வசனத்தில் வைத்த இரட்டை அர்த்தங்களை சற்று காட்சிகளில் வைத்திருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

 

புதுமண தம்பதிகளின் ஏக்கத்தை நகைச்சுவையாக காட்டி, இளசுகளை கவரும் இயக்குநர், ஆர்.சுந்தராஜன், சச்சு ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் மூலம் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணத்திற்கு தயாராகிறவர்களு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார்.

 

‘பூம் பூம் காளை’ சிரிக்க, சிந்திக்க

 

ரேட்டிங் 3.5/5