Latest News :

‘முன்னா’ விமர்சனம்

41386ca186259d38fca6e915fae428f6.jpg

Casting : Sangai Kumaresan, Niya Krishna, Ramya, Raju, Sindhu, Kennady

Directed By : Sangai Kumaresan

Music By : DA Vasanth and Sunil Lazar

Produced By : Sri Thillai Eswaran Pictures - Ram Muthuselvan

 

நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் சங்கை குமரேசன், தங்களது சமூகம் இப்படியே இருந்துவிடாமல், மற்றவர்களைப் போன்று நாகரீக வாழ்க்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக சிறு வயதிலேயே பெற்றோர்களை எதிர்த்து அக்கூட்டத்தில் இருந்து வெளியேறுபவர், கோடீஸ்வரனாக வேண்டும் என்ற கனவோடு பயணிக்க, அவருடைய கோடீஸ்வர கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதே படத்தின் கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசனின் வெகுளித்தனமான நடிப்பும், தோற்றமும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. தனது சமூகம் நாகரீக வாழ்க்கைக்கு வர வேண்டும், என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் போது, ஒட்டு மொத்த கழைக்கூத்தாடிகளின் வலிகளை எடுத்துரைப்பவர், அதே சமயம், பேராசை எப்படிப்பட்ட இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும், என்பதையும் தனது நடிப்பால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நியா கிருஷ்ணன், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருப்பதோடு, காதல் மற்றும் நடனக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

 

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜு, அம்மாவாக நடித்திருக்கும் சிந்து, நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் கென்னடி, ரம்யா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் அளவாக நடித்து கவர்கிறார்கள்.

 

டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் புரியும்படியும், சிந்திக்கும்படியும் உள்ளது. சுனில் லாசரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, பாடல் காட்சிகளை படமாக்கியது மற்றும் பட காட்சிகள் என முழு படத்தையும் குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை வைத்துக்கொண்டு முடித்திருப்பவர், தன்னால் முடிந்தவரை லொக்கேஷன்களை வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார்.

 

படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடிகளின் துயர வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், அவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நற்பன்புகளையும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

 

வாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருந்து விடாமல், உயர் நிலைக்கு வர வேண்டும், என்ற கருத்தை கதையாக்கிய சங்கை குமரேசன், கோடீஸ்வர கனவு, அதிர்ஷ்ட்டம் போன்ற கூடுதல் விஷயங்களை உற்புகுத்தி கதையின் போக்கை மாற்றி, சில இடங்களில் திரைக்கதையை சிதைத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

 

இருந்தாலும், மக்கள் அறிந்துக்கொள்ளக் கூடிய நல்ல விஷயத்தை நேர்மையான முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் சங்கை குமரேசனையும், அவரின் சமூக அக்கறையை எடுத்துரைக்கும் விதமாக இருக்கும் ‘முன்னா’ படத்தையும் தாராளமாக வரவேற்கலாம்.

 

ரேட்டிங் 3/5