Latest News :

’பிரண்ட்ஷிப்’ விமர்சனம்

b1101c06f42438d3c63f439427fe44f0.jpg

Casting : harbajan Singh, Sathish, Losliya, Arjun

Directed By : John Paul Raj & Sham Surya

Music By : D.M.UdhayaKumar

Produced By : Seantoa Studios & Cinemaass

 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களான ஹர்பஜன் சிங், சதிஷ், பாலா ஆகியோர் படிக்கும் வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக சேருகிறார் லொஸ்லியா. முதலில் அவரை ஒதுக்கும் சக மாணவர்கள், பிறகு அவருடைய குறும்பத்தனத்தால் அவருடன் நட்பு பாராட்டுகிறார்கள். பிறகு அனைவரும் நெருங்கிய நண்பர்களாக, அந்த நட்புக்கு மிகப்பெரிய கலங்கம் ஏற்படுகிறது. தங்களது நட்பில் கலங்கம் ஏற்படுத்தியவர்களை களை எடுக்க நண்பர்கள் இறங்கும் போது மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா, என்பதோடு, பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனை குறித்தும் அழுத்தமாக பேசுவது தான் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் கதை.

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கும் படம் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவருடைய கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இருக்கிறது. அவருக்காகவே வைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியை வைக்காமலே இருந்திருக்கலாம், என்று எண்ண தோன்றுகிறது.

 

சதிஷ், கதாப்பாத்திரங்களில் ஒருவராக நடித்தாலும், பல இடங்களில் காமெடி பண்ண முயற்சித்து ஒரு கட்டத்தில் சோர்ந்துவிடுகிறார். வெட்டுக்கிளி பாலா கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

 

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற துள்ளல் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். ஆனால், மேக்கப் இல்லாமல் அம்மணியை பார்க்க முடியாது போலிருக்கே.

 

நட்பு, சோகம், அதிர்ச்சி என நகர்ந்துக் கொண்டிருக்கும் படத்தில் திடீர் திருப்புமுனையாக எண்ட்ரி கொடுக்கும் அர்ஜுன் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. அவருக்கான சண்டைக்காட்சிகளும், நீதிமன்ற காட்சிகளும் படத்தை கவனிக்க வைக்கிறது.

 

எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, வெங்கட் சுபா ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் அமைதியாக இருந்தே கொடூர வில்லத்தனத்தை அசால்டாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமாரின் பாடல்கள் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற துள்ளல் ரகம். பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. 

 

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்.சி கல்லூரி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். அதை விட லொஸ்லியாவை கலர்புல்லாக கட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

 

விக்ரமனின் ‘புது வசந்தம்’ நட்புக்கே சவால் விடும் அளவுக்கு கதையை தொடங்கும் இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா, அடுத்தடுத்த காட்சிகளில் வித்தியாசத்தை கையாள வேண்டும் என்று, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனை பற்றி பேசுகிறார்கள்.

 

நட்பை சொல்வதில் சற்று தடுமாற்றம் அடைந்திருக்கும் இயக்குநர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், என்ற கருத்தை சொல்லும் போது, காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ’ப்ரண்ட்ஷிப்’ சமூகத்திற்கான படம்.

 

ரேட்டிங் 3/5