Latest News :

’யாரோ’ விமர்சனம்

2c00359982891cf836fecd591b0af9f5.jpg

Casting : Venkat Reddy, Upasana

Directed By : Sandeep Sai

Music By : Franklin

Produced By : Venkat Reddy

 

நாயகன் வெங்கட் ரெட்டி, கடலோரத்தில் இருக்கும் பெரிய பங்களாவில் தனியாக  வசித்து வருகிறார். அடிக்கடி பயங்கரமான கனவுகள் காண்பவர், தன் வீட்டில் யாரோ இருப்பது  போல உணர்கிறார். ஆனால், அவரது நண்பர்கள் அப்படி யாரும் இல்லை, என்று அவருக்கு தெளிவுப்படுத்துகிறார்கள். இந்த நிலையில், தன் வீட்டில் கேமரா ஒன்றை கண்டெடுக்கும் வெங்கட் ரெட்டி, அதில் முதியவர் ஒருவரை முகமூடி அணிந்த நபர் கொலை செய்யும் வீடியோ காட்சி இருப்பதை  பார்த்து அதிர்ச்சியடைகிறார். யார் அந்த கொலையாளி?, அந்த கேமரா ஹீரோ வீட்டுக்கு எப்படி வந்தது? போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘யாரோ’.

 

நாயகன் வெங்கட் ரெட்டிக்கு முதல் படம் என்றாலும் முழு படத்தையும் தன் தோள் மீது சுமக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த பாரத்தை அவரால் தாங்க முடியவில்லை என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. பல இடங்களில் ஓவர் ஆக்டிங் மூலம் சோதிக்கவும் செய்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் உபாசனா, பேருக்கு தான் நாயகியே தவிர படத்தில் அதற்கான எந்த வேலையும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு சில காட்சிகளில் நடித்து விட்டு போவது தான் அவரது வேலை.

 

கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவும், ப்ராங்ளினின் இசையும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ஏற்ப இருவரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

 

சைக்கோ த்ரில்லர் ஜானர் கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் சந்தீப் சாய், திரைக்கதையில் கவனம்  செலுத்தாமல்,  நாயகனை அனைத்துக் காட்சியிலும் நடிக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘யாரோ’ செம போர்

 

ரேட்டிங் 2/5