Latest News :

’என்ஜாய்’ திரைப்பட விமர்சனம்

8e34870ff98c14cd714c62f090f76405.jpg

Casting : Madhankumar, Dancer Vignesh, Harish, Niranjana, GV Abarna, Sai Thanya, Hasin, Charumisa

Directed By : Perumal Kasi

Music By : KM Rayon

Produced By : LNH Creations - K Lakshmi Nayaranan

 

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், ஐடி நிறுனத்தில் பணியாற்றும் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரீஷ்குமார் ஆகிய மூன்று பேரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பேச்சுலர் இளைஞர்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அதுபோல வாழ நினைக்கும் இந்த இளைஞர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்க நினைக்கிறார்கள். அதற்காக கொடைக்கானல் பயணிக்கிறார்கள்.

 

இதற்கிடையே கல்லூரியில் படிக்கும் நிரஞ்சனா, ஜி.வி.அபர்ணா, சாய் தன்யா ஆகியோர் சக மாணவிகள் போல் வசதியாக வாழ்வதற்கும் ஆடம்பரமாக செலவு செய்வதற்காகவும் பணத்திற்காக தவறான பாதையில் பயணிக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக பணக்காரர்கள் நடத்தும் இரவு விருந்தில் பங்கேற்க கொடைக்கானல் செல்லும் இவர்கள் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அங்கு உல்லாசமாக இருக்க வரும் இளைஞர்களிடம் உதவி கேட்கிறார்கள். இளைஞர்கள் பெண்களை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதை கிளுப்பாக சொல்வது தான் ‘என்ஜாய்’.

 

தலைப்புக்கு ஏற்றபடி படம் முழுவதையும் ஜாலியாக நகர்த்தி செல்லும் இயக்குநர் அவ்வபோது இரட்டை அர்த்த வசனங்களையும், ஆபாச காட்சிகளையும் வைத்து திரையரங்கையே கிரங்கடித்தாலும் இறுதியில் இளசுகளுக்கு மெசஜ் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

 

மதன்குமார், நடன கலைஞர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு முதல் படம் போல் இல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

 

கல்லூரி மாணவிகளாக நடித்திருக்கும் நிரஞ்சனா, ஜி.வி. அபர்ணா, சாய் தன்யா, ஹாசின் மற்றும் சாருமிசா ஆகியோரும் தங்களை வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கிராமத்து பெண்களாக வருபவர்கள் பிறகு மாடர்ன் உடைக்கு மாறி, இளைஞர்களுடன் இரட்டை அர்த்த வசனங்களில் பேசி அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் பியூட்டி.

 

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவு கொடைக்கானலை கூடுதல் அழகாக காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் கலர்புல்லாக காட்டியிருப்பவர் படம் முழுவதையும் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார்.

 

கே.எம்.ரயானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒகே ரகம் தான்.  அதிலும், இளைஞர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் குடி வரும் பெண்ணை காட்டும்போதெல்லாம் ஒலிக்கும் பீஜியத்திற்கு ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் பெருமாள் காசி, இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படமாக இயக்கியிருந்தாலும், அதை பாடம் எடுப்பது போல் இல்லாமல், அவர்கள் என்ஜாய் செய்து ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார்.

 

குறிப்பாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்வதால் அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் இயக்குநர் பணக்காரர்களின் இரவு வாழ்க்கை பற்றியும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

 

இளைஞர்களுக்காக படம் எடுக்கிறேன் என்ற பெயரில் காமக்களியாட்டத்தை கொஞ்சம் அதிகமாக ஆடியதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அனைத்து தவறான விஷயங்களையும் காட்டிவிட்டு, இறுதியில் இப்படி செய்யாதீர்கள் என்று புத்திமதி சொல்லியிருக்கும் இயக்குநர் மெசஜ் என்ற பெயரில் இளைஞர்களுக்கு காமவலை விரித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘என்ஜாய்’ இளைஞர்களை மகிழ்விக்கும்.

 

ரேட்டிங் 2.5/5