Latest News :

’கொலை தூரம்’ திரைப்பட விமர்சனம்

f7b113da7789b70872bbbde0c73f3a70.jpg

Casting : Yuvan Prabhakaran, Smandhu, Jaya, Ambani Sankar, Ranjan, Karathe Raja, Benjamin, Bonda Mani

Directed By : Prabhu

Music By : Indhirajith

Produced By : Hasini Prabhakar

 

பெற்றோர் போல் தனது இரண்டு தங்கைகளை பாசமாக வளர்க்கும் நாயகன் யுவன் பிரபாகர், அவர்களுக்கு திருமணம் ஆன பிறகு தான் தனது திருமணம் பற்றி யோசிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருப்பதால் அவரது காதல் முறிந்து போகிறது. இதற்கிடையே துபாயில் வேலை பார்த்து பொருளாதார ரீதியாக உயர்வடையும் நாயகன், தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். பிறகு அவரும் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துக் கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவரது இல்லற வாழ்வில் திடீர் புயல் வீச, அதன் மூலம் அவர் கொலை குற்றவாளியாகிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி திசைமாறியது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் யுவன் பிரபாகருக்கு இது தான் முதல் படம். ஆனால், முதல் படத்திலேயே பலமான கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்களை மிரட்டுகிறார். நல்லவனாக ஒரு முகம், கெட்டவனாக ஒரு முகம் என ஒரு மனிதனின் இரட்டை குணங்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பதற வைக்கவும் செய்கிறார்.

 

நாயகனின் தங்கைகளாக நடித்திருக்கும் சமந்து மற்றும் ஜெயா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

அம்பானி சங்கர், போண்டா மணி, பெஞ்சமின், கராத்தே ராஜா, ரஞ்சன் என தெரிந்த முகங்கள் தங்களது பங்களிப்பு மூலம் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்கள்.

 

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை, “வா..மாம்மா...குறும்பாடு காத்திருக்கு...” என்ற படத்தின் பாடல் வரிகள் போல இளமையாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.

 

செந்தில் மாறனின் ஒளிப்பதிவும், இந்திரஜித்தின் இசையும் திரைக்கதைக்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரபு, இந்த படத்தின் மூலம் நல்ல மெசஜ் சொல்லியிருப்பதோடு, பெண்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார். ஆனால், கொரியரில் வந்த ஒரு பார்சலை வைத்துக்கொண்டு மனைவியை சந்தேகப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதையின் மையப்புள்ளிக்கான காரணம் பலம் இல்லாமல் இருப்பதால், இயக்குநர் சொல்ல வந்த நல்ல விசயம் கூட பலவீனமாகி படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது.

 

இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் அறிமுக கலைஞர்கள் தங்களது சினிமா ஆசையை நிறைவேற்றிகொள்வதற்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அதில் சமூகத்திற்கான நல்ல கருத்தை சொல்லியிருக்கும் இந்த ‘கொலை தூரம்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2/5