Apr 07, 2020 01:40 PM

தியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும்! - திசைமாறும் தமிழ் சினிமா

தியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும்! - திசைமாறும் தமிழ் சினிமா

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இருப்பினும், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏராளமான சாமாணிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், சினிமா, தொலைக்காட்சி என பொழுதுபோக்கு துறையும் மிகபெரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.

 

கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை உடனடியாக திறக்க கூடாது, என்று சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படியே சினிமா தியேட்டர்க திறந்தாலும், கொரோனா அச்சத்தால் மக்கள் படம் பார்க்க வர மாட்டார்கள், அதனால், சினிமா துறையில் ஏற்பட்ட பாதிப்பு சீராக காலதாமதமாகும், என்று சில சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு ரிலீஸ் ஆக இருந்த சில திரைப்படங்கள், தற்போதைய சூழலால் டிஜிட்டல் தளங்களில் வெளியாக உள்ளது. ஆம், கொரோனா பாதிப்புக்கு முன் தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியானது. ஆனால், அப்படங்கள் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே தியேட்டர்கள் மூடப்பட்டதால், அப்படங்களின் தயாரிப்பாளர்கள் இரண்டாவது முறையாக அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட காத்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், தற்போது சூழ்நிலையில் தியேட்டர்கள் மீண்டும் திறப்பது, அப்படி திறந்தாலும் மக்கள் வருவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, என்பதால், டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிட தொடங்கியுள்ளார்கள். அதன்படி, ஹரிஷ் கல்யான், தன்யா ஹோப், விவேக் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘தாராள பிரபு’ படம் அமேசான் தளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் செய்வத்ற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.