May 27, 2020 06:58 AM

சினிமா, டிவி இரண்டிலுமே அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு! - கல்யாணியின் பகீர் பேட்டி

சினிமா, டிவி இரண்டிலுமே அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு! - கல்யாணியின் பகீர் பேட்டி

கமல், ஸ்ரீதேவி, மீனா என்று தமிழ் சினிமாவில் குழந்தை நடத்திரமாக அறிமுகமாகி பிறகு முன்னணி நடிகர், நடிகைகளாக உயர்ந்தவகள் பலர் இருக்கிறார்கள். ஆனால், சிலர் மட்டும் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகியும், கதாநாயகன், கதாநாயகியாக ஜொலிக்க முடியாமல் போவதும் உண்டு. அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தனது திறமையை நிரூபித்தவர் கல்யாணி.

 

பிரபுதேவாவின் ‘அள்ளிதந்த வானம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கல்யாணி, அப்படத்தில் தனது நடனம் மற்றும் நடிப்பு மூலம் அசத்தியவர், அப்படத்தை தொடர்ந்து ‘ஸ்ரீ’, ‘ரமணா’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும், அவரால் கதாநாயகியாக சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

 

ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர், அதன் பிறகு சினிமா மற்றும் டிவி என இரண்டிலும் இருந்து முழுவதுமாக ஒதுங்கிவிட்ட கல்யாணி, அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

 

நடிப்பு தான் எனக்கு பிடிக்கும், என்று கூறும் கல்யாணி, அப்படிப்பட்ட நடிப்பை தொடர முடியாமல் போனதற்கு சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்னதே காரணம், என்று கூறியிருக்கிறார்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கல்யாணி, ”கதாநாயகியாக நடிக்க தொடங்கிய போது பல வாய்ப்புகள் வரும். என் அம்மாவிடம் பேசுபவர்கள் முன்னணி ஹீரோ, பெரிய தயாரிப்பாளர் படம், உங்க பொண்ணு தான் ஹீரோயின், என்று சொல்வார்கள். அம்மாவும் சந்தோஷமாக ஒகே சொல்வார்கள். பிறகு அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என்று சொல்வார்கள். அப்போது கூட எங்களுக்கு சரியாக புரியாது. ஆனால், அந்த நபர் தொடர்ந்து பேசும் போது தான், அவர்கள் எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று தெரியும். உடனே விருப்பம் இல்லை, என்று சொல்லிவிடுவோம். இப்படி பல தொல்லைகள் வந்ததல் தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்.

 

சினிமாவுக்கு பிறகு டிவி-யின் வாய்ப்பு வந்தது. அதுவும் நடிப்பு தானே என்று சீரியலில் நடிக்க தொடங்கியதோடு, நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினேன். ஆனால், அங்கேயும் பாலியல் சீண்டல்கள் இருந்தது. தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு அந்த சேனலின் புரோகிரம் ஹெட் என்னை, இனி நம்ம சேனலில் பல நிகழ்ச்சிகளை நீங்க தான் தொகுத்து வழங்க போறீங்க, என்று சொன்னதோடு, என்னிடம் பேச வேண்டும் என்று கூறி பப்புக்கு அழைத்தார். நான் நேரம் இல்லை என்று கூறிவிட்டேன். உடனே அந்த தொலைக்காட்சியில் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை. நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் கூட என்னை அழைக்கவில்லை.

 

ஆக, சினிமாவில் மட்டும் அல்ல தொலைக்காட்சிகளிலும் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் இருக்கிறது. அதனால், இரண்டும் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.