Feb 27, 2021 03:45 AM

நடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்கள்! - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்

நடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்கள்! - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்

நடிகர் விமலின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக தானே சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்த விமல், ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். அப்படத்தின் வெளியீட்டுக்காக விநியோகஸ்தர்களிடம் பெரும் தொகை ஒன்றை அட்வான்ஸாகவும், கடனாகவும் அவர் பெற்றதாக கூறப்படுகிறது.

 

மேலும், ஒரே வருடத்தில் சுமார் ஆறு படங்களில் நடித்து மொத்த கடனையும் அடைத்துவிடுவதாக விமல் வாக்குறுதி அளித்ததால், முன் பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் ‘மன்னர் வகையறா’ படத்துக்கு வாங்கிய தொகையை உடனடியாக கேட்காமல் பொறுமை காத்துள்ளனர். ஆனால், 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கிய விமல், கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கு குறைந்தபட்ச தொகையை கூட கொடுக்கவில்லை என்றும், இன்று வரை ’மன்னர் வகையறா’ படத்துக்கு பெற்ற முன் பணத்தையும் கொடுக்கவில்லை, என்றும் கூறப்படுகிறது.

 

அதேபோல், கொரோனா பிரச்சினைக்கு பின் வெளியான விமலின் ‘கன்னிராசி’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததோடு, தமிழகம் முழுவதும் ரூ.23 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாம். விமலின் மார்க்கெட் இப்படி அதளபாதாளத்திற்கு செல்ல, அவர் உடனடியாக தனது சம்பளத்தை ரூ.25 லட்சமாக குறைத்துக் கொண்டு, ’குலசாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், விமலின் சம்பள குறைப்பை அறிந்த அவருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் ‘மன்னர் வகையறா’ பட வெளீயீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள், இனியும் பொருமை காத்தால் விமலிடம் இருந்து பணம் வராது, என்பதை உணர்ந்து, அவர் மீது விநியோகஸ்தர்கள் சங்கங்களில் புகார் கொடுக்க தொடங்கியிருக்கிறார்களாம்.

 

தற்போதைய நிலவரப்படி நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் கோவை, சென்னை, திருச்சி பகுதி விநியோகஸ்தர்கள் தங்களுக்கு விமல் தர வேண்டிய ரூ.3.5 கோடியை வசூலித்து தருமாறு புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த பிரச்சனையால் விமல் நடித்து முடித்துள்ள மற்றும் நடித்து கொண்டிருக்கும் படங்களின் வியாபாரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், புதிய படங்களில் விமலை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ஏற்கனவே, தனக்கு எதிரான புகார்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து, மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மவுனம் காத்து வந்த நடிகர் விமல், இந்த பிரச்சனை குறித்தாவது பேச வாய் திறப்பாரா, என்று பார்ப்போம்.