May 29, 2025 07:00 AM
பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராஜேஷ், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.
மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஜேஷ், வில்லன், குணச்சித்திரம், நாயகன் என பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார்.