Apr 21, 2025 06:24 PM

தேவயானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நிழற்குடை’! - மே 9 ஆம் தேதி வெளியாகிறது

தேவயானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நிழற்குடை’! - மே 9 ஆம் தேதி வெளியாகிறது

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில், சிவா ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிழற்குடை’. குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்கியிருக்கும் சிவா ஆறுமுகம், பிரபல இயக்குநர் கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

 

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், விஜித் நாயகனாகவும், கண்மணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை மற்றும் ஹிஹாரிகா, அஹானா என்ற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

 

வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘நிழற்குடை’ படம் குறித்து இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறுகையில், “பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள், ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள். நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் ’தொட்டாசினுங்கி’, அந்த படத்தில் தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார். பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.

 

யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், தமிழ் நாடு, புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன. 

 

கதை, திரைக்கதை எழுதி சிவா ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் வசனத்தை ஹிமேஷ்பாலா எழுதியிருக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரோலக்ஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்குநராக விஜய் ஆனந்த் பணியாற்றியிருக்கிறார்.