May 17, 2025 05:02 AM

’ஹரி ஹர வீர மல்லு’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

’ஹரி ஹர வீர மல்லு’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிரமாண்டமான மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

தற்போது இறுதி கட்ட பணிகளில் உள்ள ’ஹரி ஹர வீர மல்லு’ வரும் ஜூன் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன.  VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.

 

தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா, ஒரு இயக்குநராக ஒவ்வொரு துறையையும் சீராக வழிநடத்தி, திரையில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இருக்குமாறு உறுதி செய்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை  மொத்தமாக பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் வகையில் உருவாகியுள்ளது.

 

பாபி தியோல் முகலாய அரசராகவும், நிதி அகர்‌வால் முக்கிய கதாபாத்திரத்திலும், சத்யராஜ் மற்றும் ஜிஷ்ணு செங்குப்தா போன்ற அனுபவ நட்சத்திரங்கள் கதைக்கு மெருகுத்தன்மையையும் , ஆழத்தையும் அளிக்கின்றனர்.

 

தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ள இந்தப் படம் ரசிகர்களின் மனங்களையும், பாக்ஸ் ஆஃபிஸையும் வெல்வதற்கான முழுத் தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார்.