Jul 15, 2025 06:15 PM

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு  அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

நிகழ்ச்சியில், தங்கதுரை பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு.. எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ  வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு.. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி.” என்றார்.

 

ஹெவன் பிக்சர்ஸ் சந்துரு பேசுகையில், “உசுரே படத்தை பற்றி சொல்லனும்னா ரொம்ப அழகா வந்துருக்கு படம்.. மவுலி சாருக்கு நன்றி இசை மற்றும் படம் ரொம்ப அழகாவே வந்திருக்கு.. இந்த படத்திற்கு சப்போர்ட் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.” என்றார். 

 

ஒளிப்பதிவாளர்மார்கி சாய் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம்  இந்த படம் பண்ணும்போது அவளோ சிறப்பா இருந்துச்சு 22 நாட்களில்  எடுத்த படம் இது. எனக்கும் இயக்குனர் நவீனுக்கும் ஒரு கம்பர்ட் சோன் இருந்தது. இந்த மூவி ஷூட் விரைவாக முடிந்ததில் கொஞ்சம் வருத்தம் இருந்தது, ஏனெனில் எங்க இரண்டு பேருக்கும் அவ்ளோ நெருக்கம் இந்த படத்துல கிடைத்தது. இந்த படம் மண் சார்ந்த  படம்....  என் கூட ஒத்துழைத்த என் டெக்னீசியன்ஸ் அனைவருக்கும் நன்றி. இதுதான் என் முதல் படமும் முதல் மேடையும் கூட அதனால் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் இப்படத்திற்கு சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டுக் கொண்டார்.” என்றார்.

 

11 இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம் மியூசிக் ரொம்ப நல்லா இருந்துச்சு டீஜே ரொம்ப நல்லா பன்னிருக்காரு.. உங்களை அசுரன் படத்தில் பார்த்தது. அதுக்கப்புறம் இப்ப பார்க்கிறோம்.. தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, அடுத்தடுத்து அதிகமான படங்கள் அமைந்து வெற்றி பெறனும்னு வாழ்த்துகிறேன்... என்றுமே அழியாத கிராமத்து காதல் கதை இது கைவிடாது உங்களை..... இந்த உசுரே டீம் கு  என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சத்யா  பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம் டைட்டில் உசுரே இன்னும் கேட்கும் போது எனக்கு நம்ம இசைப்புயலோட  உசுரே நீதானே னு ஒரு வைப் கிடைச்ச மாதிரி, அதே வைப் இந்த படத்துக்கும் கண்டிப்பா கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்... தனது முதல் படத்திலேயே அருமையான இசையை கொடுத்திருக்காரு இசையமைப்பாளர் கிரன் ஜோஸ்.. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், டிஜெய் ஒரு சிறந்த இசையமைப்பாளர் கூட.. நல்ல நண்பர்.. கிரண் ஜோஸ் க்கு வாழ்த்துக்கள் உசுரே. இந்த  நியூ டீமோட இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி... இயக்குனர் நவீன் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்காரு.. இந்த படத்தை ஒரு நேட்டிவிட்டி சப்ஜெக்டோட கொடுத்திருக்காரு. எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கணுமோ அந்த அளவுக்கு உண்மை தன்மையோடு இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நவீன்.. ஒரு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஆன நட்பு எந்த அளவுக்கு இருந்தா ஒரு நல்ல படம் கிடைக்கும் ன்ற அளவிற்கு இந்த படம் இருக்கு... தனது முதல் படத்திலேயே இந்த அளவிற்கு ஒரு தரமான படத்தை கொடுத்ததற்கு இந்த டீமோட ஒத்துழைப்பு முக்கிய காரணம்.. இயக்குனர் நவீனுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.                                                                                                                                   

 

இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசுகையில், “விஜயும் அஜித்தும் இருந்தவரை வந்த காதல் சினிமா சமீபத்தில் காதலே இல்லாத தமிழ் சினிமாவாக ஆயிடுச்சு, அதோட துவக்கமா இந்த உசுரே படத்தை பார்க்கிறேன். பொருளாதாரத்தை மட்டுமே நோக்கி ஓடுகின்ற இந்த உலகத்துல ஒரு மனிதனுக்கு காதல் இருந்தா அவன்  எந்த சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக இருப்பான். உற்சாகமான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரண் ஜோஸ். தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக டிஜே வருவாரு, டிஜே ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட அவர் நடிக்கிற படத்துல மற்றொரு  இசையமைப்பாளரை வரவேற்று  பெருந்தன்மையாக நடந்திருக்கிறார், அவருக்கும் என் வாழ்த்துக்கள். படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகை மந்த்ரா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி.. ரொம்ப நாளைக்கு அப்புறமா மறுபடியும் தமிழ்ல படம் பண்ணனும்னு ஒரு ஆசை.. அதற்கான நேரத்திற்காக காத்திருந்தபோது.. இயக்குனர் நவீனும் தயாரிப்பாளர் மவுலியும் இந்த கதையை சொல்லும்போது நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.. ஒரு இண்டிபெண்டன்ட் உமனா சேலஞ்ச் இருக்கிற கேரக்டரா நடிச்சிருக்கேன்.. ஒரு படத்திற்கு நான்கு தூண்கள் கண்டிப்பாக தேவை அந்த வகையில் இந்த படத்திற்கு நான்கு தூண்களாக ப்ரொடியூசர் டைரக்டர், டிஓபி, அண்ட் மியூசிக் அமைஞ்சிருக்கு.. அடுத்து ஹீரோ டீஜய்,, அவர் செட்டில் பார்த்தீங்கன்னா நல்ல கலகலப்பாக இருந்தாலும் ஷாட் னு சொல்லும்போது அந்த கேரக்டராவே மாறிடுவாரு அந்த அளவுக்கு டெடிகேட்டிவ்  அடுத்து ஜனனி,  ஜனனி என் பொன்னாகவே மாறிட்டாங்க.. உசுரே படத்துக்கும் எனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஆர் வி உதயகுமார் அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம்... பத்தோட  பதினொன்னா இந்தப் படம் இருக்கும்னு தான் நினைச்சுகிட்டு வந்தேன் ஆனால் இதை நம்பர் ஒன் படம் ... இயக்குனரோட ஒரு நாலு ஷாட் பார்த்தாலே இவன் தேறிடுவான்னு எனக்கு தெரிஞ்சிடும்.. அந்த வகையில் இயக்குனர் நவீன் நீங்க பாஸ்.. எமோஷனை வரிகளில் கொண்டு வருவதே சிறந்த பாடலா சிரியருக்கான இலக்கணம் அந்த வகையில லால் நீங்க சிறந்த வரிகளை எழுதி இருக்கீங்க.. வாழ்வியல்ல நடக்கிற விஷயங்களை உணர்ந்து எமோஷனால் எழுதற வரிகளுக்கு ஒரு நல்ல இசை கிடைத்திருக்கு.. வெட்டு குத்து ரத்தக்களரி யான தமிழ் படங்கள் வந்து போன நிலையில், அடுத்து வந்தவர்கள் போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... , காதலை புன்முறுவலோடு  ரசித்து கொடுக்கும் காதல் படங்களை எடுக்க வேண்டும்... ஒரு புது டீமுக்கு சுதந்திரத்தை கொடுத்து ஒரு நேர்த்தியான படத்தை எடுத்த தயாரிப்பாளர் மௌலிக்கு என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் பேசுகையில், “உசுரே  படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர்.  இசையமைப்பாளர் சிங்கர் இருந்தும் இப்படத்தில் எனக்கு சப்போர்ட்டாக இருந்ததற்கு மிகவும் நன்றி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் உசுரே படத்திற்கு பத்திரிக்கையாளரான நீங்கள் எங்களுக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சிவா பேசுகையில், “இந்த டீமை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, சின்ன டீம்மாக இருந்தாலும் ஒரு நேர்த்தியான டீமா தெரியுது. இந்த டீமோட மேக்கப் சசிகுமார் தான் என்னுடைய மேக்அப் மேன். நேஷனல் அவார்டு வின்னர், அவர் இந்த படம் நல்லா வரணும்னு எனக்காக காலையிலேயே வந்து எப்ப போலாம் எப்போ போலாம்னு கேட்கும் போது, இந்த படம் வெற்றி பெறணும்னு இந்த டீம் மொத்தமா சேர்ந்து உழைப்பது தெரியுது. இவர்களைப் பார்க்கும்போது எனக்கு சென்னை 28 டீம் எப்படியோ அப்படித்தான் எனக்கு தெரிய வருது. ட்ரீம் வாரியர் ஒரு எக்ஸலண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் அவர்களிடம் உங்கள் படம் இருப்பது ஒரு நம்பிக்கையான வெற்றியை கொடுக்கும்.” என்றார்.

 

கதாநாயகி ஜனனி பேசுகையில், “டைரக்டர் சார் என்ன கதையை சொன்னாரோ அந்த அளவிற்கு அழகா படமா எடுத்து இருக்காரு, ரொம்ப நல்லா வந்திருக்கு உசுரே படம். ஆகஸ்ட் 1 தியேட்டர்ல ரிலீஸ் ஆகிறது, உசுரே படக்குழுவினருக்கு  என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.” என்றார்.

 

நடிகர் டீஜே பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், அசுரனுக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆரம்பித்த நாட்களை நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. என்னை இந்த அளவுக்கு அழைத்து வந்தது இசை தான். சிறு வயது முதல் இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேசியது இல்லை இசையிடம் மட்டுமே  பேசி வந்தேன். என் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் பாடி தயாரித்தும் வந்தேன்.  எனது 16 வயதினில், முட்டு முட்டு பாடல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானேன். எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாத ஒரு ஈழத் தமிழ் குடும்பத்திலிருந்து வந்த நான் டிஜே அருணாச்சலம். என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த என் குரு வெற்றிமாறன் அவர்களுக்கு என் முதல் வணக்கமும் நன்றியும். ஒரு வேல் முருகனா இந்த உலகத்துக்கு ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தியதற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி.  அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குநரில் ஒருவரான நவீனுக்கு நன்றி. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை ஆன ரோல் இந்த படத்துல எனக்கு. நான் சிம்புவின் ரசிகன்,  இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது. சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன். அருமையான கதையை கொடுத்த நவீனுக்கு நன்றி அடுத்தடுத்து நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  அதிக படங்களை இயக்க வேண்டும். 22 நாட்களில் முடித்த படம் அழகாக வந்திருக்கு. ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் தயாரிப்பாளர் மவுலி அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

இறுதியாக இயக்குநர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் மௌலி எம் ராதாகிருஷ்ணன்  நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே முடிந்தது.