‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர்கள் வசந்த பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்”. என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன். அந்த அளவுக்கு கதையும் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். இளையராஜாவுக்கு அடுத்து அருமையான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான். தயாரிப்பாளர்கள் படம் முடியும்போதும் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஜிவி பிரகாஷால் ஒரு தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லோரும் வந்திருக்கும் ஆடியோ லான்ச் இதுதான் என நினைக்கிறேன். சாம் சிஎஸ் இசை அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்”. என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், “’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”. என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், “இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜிவி இசையில் நிறைய படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஆனால், அவர் நடிக்கும் படத்திற்கு இதுதான் முதல் முறை பாடல் எழுதுகிறேன். சாம் சிஎஸ் அருமையாக இசை கொடுத்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”. என்றார்.
நடிகை தேஜூ அஸ்வினி பேசுகையில், “இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவி சாருடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்தி பார்த்த இயக்குநர் மாறன் அவர்களுக்கும் நன்றி. சப்போர்ட் செய்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வித்தியாசமான தேஜூவை பார்ப்பீர்கள். ஆகஸ்ட் 1 படம் வெளியாகிறது”. என்றார்.
நடிகர் லிங்கா பேசுகையில், “இந்த வாய்ப்பு கொடுத்த அமல்ராஜ் சார், மாறன் சாருக்கு நன்றி. ஜிவி பிரகாஷ் சார் நடிக்க ரொம்பவே இலகுவானவராக இருந்தார். படக்குழுவினருக்கு நன்றி. படம் வெற்றி பெறும்”. என்றார்.
நடிகை சந்திரிகா பேசுகையில், “நான் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் பாட்டில் தான் கதை உள்ளது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை. ஆகஸ்ட் 1 படம் பாருங்கள்”. என்றார்.
நடிகர் முத்துக்குமார் பேசுகையில், “நான் இதுவரை செய்த படங்களில் இது வித்தியாசமானது. நான் சரியாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். சீரியஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இதில் என் கதாபாத்திரம் இருக்கும். தயாரிப்பாளருக்கு நன்றி. ஜிவி பிரகாஷ் எளிமையாக பழகக்கூடியவர். தேஜூ மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. என்றார்.
நடிகை பிந்து மாதவி பேசுகையில், “ரொம்ப நாள் கழித்து அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இந்தப் படத்தின் பாடல்கள் டிரெய்லர் அனைத்தும் சிறப்பாக உள்ளது. குடும்ப செண்டிமெண்ட் கதை நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும். ’கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களை அடுத்து இந்தப் படமும் மாறனுக்கு வெற்றி பெறும். ஜிவி இந்தப் படத்திற்கு பாதி சம்பளதான் வாங்கி இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். தயாரிப்பாளர், இயக்குநர் மீது அதிக அன்பு கொண்டவர் ஜிவி பிரகாஷ். முதல் மூன்று நாட்கள் ரிவியூ செய்ய வேண்டாம் என்று விஷால் சார் முன்பு இதே மேடையில் சொல்லியிருந்தார். அதை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். மூன்று நாட்கள் ரிவியூ வரவில்லை என்றால் பெரும்பாலான படங்கள் வந்ததா என்று ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். கொஞ்சம் கனிவாக, பேலன்ஸ்டாக ரிவியூ கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”. என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “படத்தின் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் போய் சேர்ந்திருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சாம் சிஎஸ் இசையில் பின்னியிருக்கிறார். தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு நன்றி. முன்பு இதுபோல அதிகம் செய்தவர் ரஜினிகாந்த் அவர்கள். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”. என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “பிளாக்மெயில் என்ற வார்த்தை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. இந்த வார்த்தை எப்படி வந்திருக்கும் எனத் தேடினேன். மெயில் என்றால் வாடகை, கட்டணம் என்ற அர்த்தத்தில் வரும். 16 ஆம் நூற்றாண்டின் வார்த்தை இது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையில் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் இருந்த இடத்தில் தலைவர்கள், கொள்ளையர்கள் சென்று சூறையாடி இருக்கிறார்கள். அப்படி எங்களை கொள்ளையடிக்காதே, சூறையாடாதே என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தான் மெயில். பிளாக்காக அதை கொடுத்ததால் பிளாக்மெயில் என்று பெயர் வந்தது. பாத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் ‘விக்ரம் வேதா’வுக்கு அருமையாக இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை சாமுக்கும் உண்டு. 17 வயது பையனாக என் கண் முன்னே வந்து வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ். மகிழ்ச்சியாக உள்ளது. யாரையும் காயப்படுத்தாத குணம் கொண்டவர். அவரது குடும்ப விஷயத்தில் எந்தளவுக்கு பக்குவமாக நடந்தார் என்பது வியப்பாக இருந்தது. எனக்காக இரண்டு படங்கள் விட்டுக்கொடுத்தார். அவர் இல்லை என்றால் படம் வெளியாகி இருக்காது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”. என்றார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், “இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாறனுடைய முந்தைய படங்களுக்கு நான் ரசிகன். அவர் பெரும்பாலும் இருளில் தான் படம் எடுப்பார். எனக்கு ஜிவி பிரகாஷ் பல இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார். படத்தில் செண்டிமெண்ட்டாக விஷயம் இருக்கிறது. படம் வெற்றி பெறும் என்று ஜிவியிடம் சொன்னேன். படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்”. என்றார்.
’ட்ரீம் வாரியர்ஸ்’ சிஇஓ குகன் பேசுகையில், “இந்தப் படத்தின் கனெக்ட் எனக்கு அமல்ராஜ் மூலமாகதான் வந்தது. விழா நாயகன் சாம் சிஎஸ்ஸூக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் மாறன் தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இதிலும் மேஜிக் செய்திருப்பார். ஜிவி ரசிகர்கள் மற்றும் த்ரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக அமையும். படத்தில் நடித்துள்ள மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் இந்தப் படம் முக்கியமான படமாக அமையும். படத்திற்கு பாடல்கள்தான் முக்கியம். சமீபகாலங்களில் பாடல்களை படத்தில் முழுதாக வைப்பதற்கு தயங்குகிறார்கள். திரைக்கதை எழுதும்போதே இயக்குநர்கள் அதை முடிவு செய்து விடுங்கள். இது என் வேண்டுகோள்”. என்றார்.
இயக்குநர் மாறன் பேசுகையில், “கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும். உங்கள் ஆதரவு தேவை. நன்றி”. என்றார்.
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் பேசுகையில், “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”. என்றார்.