தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1960-ம் காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஆக்ஷன் கதையமசம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் எண்டடெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது. நேற்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.
மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருக்கிறது.
மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.