Nov 27, 2022 12:26 PM

உதயநிதி ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி பிறந்தநாள் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி பிறந்தநாள் வாழ்த்து

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்,  சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான என்.இராமசாமி என்கிற முரளி, உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.