Latest News :

விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மெகா தொடர்!

928720ffd4be7f8b4cb4b33a347957c8.jpg

நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர், குடும்பத் தலைவர் என பன்முகம் காட்டி வரும் குஷ்பு, சின்னத்திரையிலும் தனது வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வந்த நிலையில், அரசியலில் பிஸியானதால் நான்கு ஆண்டுகள் சிறு இடைவெளி விட்டிருந்த நிலையில், தற்போது ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மெகா தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக எண்ட்ரியாகியிருக்கிறார்.

 

சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மெகா தொடரில் குஷ்பு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ், சுதா ரவிச்சந்திரன், நக்‌ஷத்ரா நாகேஷ், சுரேஷ், ஹுசைன் அஹ்மது கான், டெல்லி குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

அவ்னி டெலி மீடியா தயாரிப்பில், ஏ.ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர் ஒரு குடும்ப தொடராகும்.

 

லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மஹாலிங்கத்திற்கு நான்கு மகன்கள். முதல் மகனின் மனைவியாக உள்ளே வருகிறார் மஹாலக்‌ஷ்மி (குஷ்பு). மஹாலக்‌ஷ்மி தனது அன்பையும், ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸுக்கும் தருகிறார். பாக்கியலட்சுமி (நக்‌ஷத்ரா நாகேஷ்) கடையில் வேலை செய்யும் பெண். சுதா ரவிச்சந்திரன் (சகுந்தலா தேவி) வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

லட்சுமி ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. லட்சுமி ஸ்டோர்ஸில் பாக்கியலட்சுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். சகுந்தலாதேவி எப்படியாவது கடையை விலைக்கு வாங்க வேண்டும், என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்கியலட்சுமிக்கும் ரவிக்கும் இடையே காதல் எப்படி ஏற்படுகிறது என்ற காட்சிகளிலும், சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் என விறுவிறுப்பாக செல்லும், இத்தொடர் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.