Latest News :

ஒடிடி உலகத்தில் நுழைந்த ராஜ் டிவி!

50105effb4c1fbb80471080bece3b96f.jpg

முன்னணி தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் டிவி என்ற ஆப் மூலம் ஓடிடி உலகத்தில் நுழைந்துள்ளது.

 

ஒடிடி மூலம் திரைப்படங்கள் பார்ப்பது மட்டும் இன்றி இசை நிகழ்ச்சிகள், தொடர்கள், நகைச்சுவை தொடர்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் புது புது ஓடிடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், தமிழக மக்களிடம் பிரபலமாக விளங்கும் தொலைக்காட்சி சேனலான ராஜ் டிவி, தனது ஒடிடி தளமான ராஜ் டிஜிட்டல் டிவி ஆப்-பை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும்.

 

RAJ DIGITAL TV OTT, AIRTEL IQ உடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ் டிஜிட்டல் டிவி OTT ஆனது சிறந்த தொழில்நுட்பத்துடன் Airtel IQ ஆல் உருவாக்கப்பட்டது. ராஜ் டிஜிட்டல் டிவி தமிழ் மொழியில் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறது.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் இசை வீடியோக்கள், சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி தொலைக்காட்சி (Live Television) பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும், இந்த சேவையின் சந்தாதாரர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர மேலும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் காத்திருக்கிறது . RAJ DIGITAL TV சந்தாத் திட்டங்கள் தினசரி ரூ.1 என்ற அடிப்படையில் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும், மேலும் மாதாந்திர அடிப்படையிலும் வருடாந்திர சந்தா திட்டத்திலும் பணம் செலுத்தி பயனாளர்கள் கண்டு களிக்கலாம். மேலும் Airtel Xtream App மூலமாகவும் ராஜ் டிஜிட்டல் டிவி OTTயை பார்த்து மகிழலாம்.

 

ஏற்கனவே ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் சேனல்களில் இரண்டு கோடி சந்தாதாரர்கள் இருக்கும் நிலையில் , மேலும் வருவாயை கூட்ட OTT தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனால் அதிகமான சந்தாதாரர்கள் பல்வேறு சேனல் பார்ட்னர்கள் மூலம் இணைக்கப்பட உள்ளனர். 

 

இந்நிறுவனம் மேலும், கேமிங், RAJ METAVESRE பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கான கூடுதலாக பணமாக்குதல் தளங்களுக்கு விரிவடைகிறது.

 

இந்த புதிய தளத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ராஜ் டிஜிட்டல் டிவி ஆப்பை தொடங்கி வைத்தார்.