சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மல்லி’ தொடர் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பாராத திருப்பங்கள் உள்ளிட்டவையுடன் சுவாரஸ்யமாக பயணிக்கும் ‘மல்லி’ தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 80 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னாள் கதாநாயகிகளான அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி ஆகிய மூவரும் முதல் முறையாக ‘மல்லி’ தொடரில் இணைந்து நடித்துள்ளனர்.
நாயகன், நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும், நளினியும் கலக்க, அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூடுகிறார் அம்பிகா. மூன்று முன்னாள் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது ‘மல்லி’ மெகாத்தொடர்.
திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், நளினி, அம்பிகா, மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, ஐசக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இத்தொடருக்கு தமயந்தி திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விஸ்வாத் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். படைப்பாக்கத்தை நீடா.கே.சண்முகம் கவனிக்க, படைப்பக்கத் தலைமைப் பணியை ப்ரின்ஸ் இம்மானுவேல் கவனிக்கிறார். ஸ்டாலின் இயக்குகிறார்.