கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் திறக்கப்படுகின்றன.
8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூடி தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மாலை திரையரங்க உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, நாளை (மார்ச் 23) முதல் தமிழகம் முழுவதும் வழக்கம் போல திரையரங்கங்கள் இயக்கப்படுகின்றது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...