Aug 08, 2017 09:51 PM

ஜி.எஸ்.டி வரியால் சினிமாவுக்கு பாதிப்பில்லை - உண்மையை உடைத்த அபிராமி ராமநாதன்

ஜி.எஸ்.டி வரியால் சினிமாவுக்கு பாதிப்பில்லை - உண்மையை உடைத்த அபிராமி ராமநாதன்

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சினிமா டிக்கெட்டின் விலை அதிகரித்துவித்தட்டதாகவும், அதனால் திரையுலகிற்கு பெருத்த நஷ்ட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் பலர் கூறி வந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சினிமா துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை, என்று தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

 

நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தொழில் வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற ‘பிக் சினி எக்ஸ்போ’ கண்காட்சி தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்த அபிராமி ராமநாதன், “ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. இப்போது இல்லை. திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது. கேளிக்கை வரி சம்பந்தமாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன முடிவு என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்களை பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டுக் கொண்டு பேசி வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக்கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ் அவர்களை பாராட்டுகிறேன்.” என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் ஆசியா கண்டம் முழுமையும் உள்ள திரையரங்குகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திரையரங்குகள் மாறுதல் மற்றும் நவீனப்படுத்துவது எப்படி என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.