மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever). அசோக்குமார் கலைவாணி இயக்கியிருக்கும் இப்படம், தற்போதைய நவீன கால காதல் மற்றும் இளைஞர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இன்றைய Gen-Z தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடிபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசுகையில், “இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடன இயக்குநர் விஜயராணி பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசுகையில், “முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.” என்றார்.
டாக்டர் வித்யா பேசுகையில், “இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.” என்றார்.
நடிகை சினேகா சக்தி பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசுகையில், “இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் பிரதோஷ் பேசுகையில், “நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.” என்றார்.
நடிகர் ஹரி பாஸ்கர் பேசுகையில், “இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், “இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசுகையில், “இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.” என்றார்.
நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது, “முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி” என்றார்.
நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசுகையில், “எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை அர்ச்சனா ரவி பேசுகையில், “இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசுகையில், “இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் புகழ் பேசுகையில், “இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது. இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

