விஜய் படத்தில் அறிமுகமாகும் 16 பெண்கள்! - எதற்காக தெரியுமா?

‘சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், இப்படம் குறித்து இதுவரை வெளிவராத அதுவும் ரொம்பவே ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், உண்மையாகவே விஜய் இப்படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் வேடத்தில் நடிக்கிறாராம். அவரது கதாபாத்திர பெயர் குரு என்றும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் விஜயிடம் பயிற்சி பெறும் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் 16 பெண்களும் விளையாட்டு வீரர்களாக இருப்பதோடு, இப்படத்தின் மூலம் தான் சினிமாவிலும் அறிமுகமாகிறார்களாம்.