Sep 12, 2018 06:14 PM

முதலிடத்தை பிடித்த ‘2.0’! - பின்னுக்கு தள்ளப்பட்ட ’பாகுபலி’

முதலிடத்தை பிடித்த ‘2.0’! - பின்னுக்கு தள்ளப்பட்ட ’பாகுபலி’

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘2.0’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் டீசரை திரையரங்குகளில் மக்களுக்கு இலவசமாக திரையிட தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த வசதியை ஏற்படுத்தியிருக்கும் லைகா நிறுவனம் இதற்காக மிஸ்டு கால் சேவை ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமை 2.0 படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ தான், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது ‘பாகுபலி’ யை பின்னுக்கு ‘2.0’ பின்னுக்கு தள்ளியுள்ளது.

 

‘2.0’ படத்தின் பட்ஜெட் விபரத்தை வெளியிட்டிருக்கும் லைகா நிறுவனம் ரூ.450 கோடி செயலவில் படத்தை தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகப்பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே பல கோடிகளை தயாரிப்பு தரப்பு வாரி இறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதன் மூலம் இந்திய திரையுலகிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கிய இயக்குநரான ஷங்கர், தனது பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெருமையை மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார்.