2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை யார்? - ரசிகர்களின் தேர்வு இதோ

2018 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே முடிய, இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை யார்? என்று ரசிகர்களிடம் இணையதளம் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியலை பார்ப்போம்.
தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா தான் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருவதோடு, ரசிகர்களையும், சினிமாக்காரர்களையும் அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருகிறார்.
’96’ படத்தின் மூலம் மீண்டும் பிஸியான ஹீரோயினாகியிருக்கும் திரிஷா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயின் பட்டியலில் அங்கம் வகிக்கும் திரிஷாவும், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியிருப்பதோடு, பல வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.
’நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பிய கீர்த்தி சுரேஷ் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர், சில படங்களில் மொக்கையான வேடங்களில் நடிப்பதால் சற்று ரசிகர்களிடம் இருந்து விலகி செல்கிறார்.
திருமணத்திற்குப் பிறகும் ஹீரோயினாக நடித்து வெற்றிப் படங்களை கொடுக்கும் சமந்தா 4 வது இடத்தையும், சாய் பல்லவி 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ‘மேயாதா மான்’ மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கர் 6 வது இடத்தையும், சயீஷா 7 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கு டாடா காட்டிய எமி ஜாக்சன் கூட 8 வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த காஜல் அகர்வால், 9 அது இடத்தை பிடித்திருக்கிறார். கோலிவுட்டின் புதுமுக ஹீரோயினான ராஷி கண்ணா 10 வது இடத்தை பிடித்திருக்கிறார்.