Oct 09, 2019 04:54 AM

தேதி கேட்கும் பிரபல நடிகர்! - பயத்தில் தெறித்து ஓடிய காஜல் அகர்வால்

தேதி கேட்கும் பிரபல நடிகர்! - பயத்தில் தெறித்து ஓடிய காஜல் அகர்வால்

என்னதான் பெரிய சம்பளம் கொடுத்தாலும் சில நடிகர்களின் படங்களில் நடிக்க நடிகைகள் விரும்புவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தை சில முன்னணி நடிகைகள் நிராகரித்து வருவதோடு, அதற்கு காரணமாக, பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது, என்று கூறி வருகிறார்கள். ஆனால், அது அந்த நடிகரிடா அல்லது படப்பிடிப்பு நடக்கும் பகுதியா, என்பது குறித்து தெளிவாக கூறவில்லை.

 

அதில் முக்கியமானவர் காஜல் அகர்வால். தமிழில் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தை முடித்திருக்கும் காஜல் அகர்வால், ‘இந்தியன் 2’ வில் நடிக்கிறார். இப்படங்களை தவிர பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே, தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர்.

 

ஆனால், அந்த படத்தை காஜல் அகர்வால் நிராகரித்திருக்கிறார். காரணம், கதைப்படி படத்தின் படப்பிடிப்பு கர்நாடக பகுதியில் உள்ள பெரிய காட்டுப்பகுதியில் நடக்கும் என்று படக்கு தெரிவிக்க, அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது, என்று கூறி அப்படத்தை காஜல் அகர்வால் நிராகரித்துவிட, இதே காரணத்தை கூறி ராஷி கண்னாவும், கோபிசந்த் படத்தை நிராகரித்திருக்கிறார்.

 

Actor Gopi Chand

 

இப்படி பல ஹீரோயின்கள் கோபிசந்த் படத்தை நிராகரித்து வந்ததால், தற்போது புதுமுகத்தை போட்டி படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.