அடங்க மறுத்த ஆர்.ஜே.பாலாஜியை அடக்கிய அரசியல்வாதி!

பிரபல ரேடியோ ஜாக்கியான பாலாஜி, சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ‘எல்.கே.ஜி’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் நடித்திருப்பதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘எல்.கே.ஜி’ படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும், எவ்வளவு பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியானாலும் தனது படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி, என்றும் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.
ஆனால், தற்போதைய சூழலில், பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களுக்கு இடையே தியேட்டர் கிடைப்பதில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளதால், ஆர்.ஜே.பாலாஜி படத்திற்கு சரியான திரையரங்கங்கள் கிடைக்காது என்பது ஒரு புறம் இருக்க, இந்த நேரத்தில் படம் வெளியானால் காணாமல் போய்விடும் என்று நாஞ்சில் சம்பத் அவருக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது பிடிவாதத்தை கைவிட்டிருக்கும் பாலாஜி, வேறு ஒரு தருணத்தில் தனது ‘எல்.கே.ஜி’ படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.