Sep 17, 2018 05:55 PM

நடிகர் கேப்டன் ராஜு மரணம்! - நடிகர் சங்கம் இரங்கல்

நடிகர் கேப்டன் ராஜு மரணம்! - நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகர் கேப்டன் ராஜு இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

 

1980 ஆம் ஆண்டு வெளியான ‘ரத்தம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகரான கேப்டன் ராஜு, ராணுவத்தில் பணியாற்றிய போதே சினிமாவின் ஆர்வத்தின் மூலம் நாடக் குழு அமைத்து பல நாடங்களை அறங்கேற்றி வந்தார். மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு என தென்ந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

 

இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை கேப்டன் ராஜு, கொச்சியிலுள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

 

கேப்டன் ராஜுவின் மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர், பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 

 

ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால்  நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக்குழு அமைத்து  நாடகங்களில் நடித்து வந்தார். 1980- ல் 'ரத்தம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார் . கடந்த 37 ஆண்டுகளில் 500 அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். விக்ரம் கதாநாயகனாக நடித்த 'இதா ஒரு சினேக கதா ' என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குநராகவும் தனி முத்திரை பதித்தார்.

 

மேலும் அணைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர். தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம், ஜீவா. என் ஜீவன் பாடுது, ராஜகுமாரன் ஆகியவை தமிழில் அவரது முக்கிய படங்களாகும். என்றும்  நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார் உறவினர்கள் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.