Dec 21, 2018 12:50 AM

மகன் செய்த சாதனை! - மகிழ்ச்சியில் மாதவன்

மகன் செய்த சாதனை! - மகிழ்ச்சியில் மாதவன்

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் மாதவன், தற்போது ஏராளமான இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக ‘இறுதிச் சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’ என இரண்டு மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்தவர், தற்போது விண்வெளி அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

 

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். பள்ளியில் படித்து வரும் வேதாந்த், நீச்சல் போட்டியில் ஆர்வம் உடையவர். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் பங்கேற்ற வேதாந்த் முதலாவதாக வந்து தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவில் வேதாந்த் வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பதால், இதனை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

 

Vedant Madhavan

 

cinemainbox.com சார்பாக தங்கம் வென்ற வேதாந்த் மாதவனுக்கு வாழ்த்துகள்.