கொரோனாவை குணமாக்கும் தமிழ் வைத்திய பாட்டு - மன்சூரலிகானின் புதிய முயற்சி

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா குறித்து மக்களிடம் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கம் இருக்க, அந்நோய்க்கான தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மேற்கொண்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனாவை நமது உணவு பழக்கம் மூலமாகவே குணப்படுத்த முடியும், அந்நோய் குறித்து நாம் அச்சப்படவும் தேவையில்லை, அரசின் ஊரடங்கும் தேவையில்லை, என்று நடிகர் மன்சூர் அலிகான், நோய் பரவ தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா மட்டும் இன்றி, பல நோய்களுக்கு நமது உணவுகளே மருந்தாக பயன்படுவதையும், எந்த எந்த நோய்க்கு, எந்த எந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதையும் விவரிக்கும் பாடல் ஒன்றை அவரே எழுதி பாடியுள்ளார்.
இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள அந்த பாடல் இதோ,