Nov 13, 2018 07:19 AM

புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்கும் நடிகர் நரேன்!

புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்கும் நடிகர் நரேன்!

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த நரேன், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

 

புதுமுகங்கள் நடிப்பில் ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் ‘கண் இமைக்கும் நேரத்தில்’ என்ற படத்தை நரேன் தயாரிக்கிறார்.

 

கன்னடத்தில் வெற்றிப் பெற்ற ‘வாசு’ என்ற படத்தை இயக்கிய அஜித் வாசன், இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் உருவாகிறது.

 

நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

 

Kan Imaikkum Nerathil

 

‘கண் இமைக்கும் நேரத்தில்’ படத்தை இயக்கும் அஜித் வாசன், நரேனுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.