மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 68 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகார் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துரை சுதாகர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “அயராத உழைப்பினால் திமுக-வின் தலைவராக உயர்ந்து, தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரது வழியில் அரசியல் பணியை திறம்பட செய்து வரும் தலைவர், தமிழகத்தின் முதல்வர் சிம்மாசனத்தில் அமரும் நாள் வெகு விரைவில் வர இருப்பதை கொண்டாட எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பலகோடி தொண்டர்களில் ஒருவனாக மீண்டும் ஒரு முறை தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.