நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கு திருமணம் - கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த் கண்ணன் - கே.பிரியங்கா திருமணம் இன்று இனிதே நடைபெற்றது.
பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரமேஷ் கண்ணா, சில படங்களை இயக்கியிருப்பதோடு, பல படங்களுக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார். இவரது மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த் கண்ணன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.ஜஸ்வந்த் கண்ணன் - கே.பிரியங்கா ஆகியோருக்கு இன்று (டிச.02) சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. நேற்று இரவு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் மீனா, தேவயானி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, இயக்குநர்கள் பாரதிராஜா, சந்தானபாரதி, ஆர்.வி.உதயகுமார், நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.