வைரலாகும் நடிகர் சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படம்!

தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி, ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சி மூலம் பிரபலமடைந்ததோடு, தொடர்ந்து தனது காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்தவர், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.
காமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாக நடிக்க, தனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதிலும் அதை நிராகரித்தவர், காமெடியனாக மட்டுமே நடிப்பேன், என்று கூறி, தற்போதும் தொடர்ந்து காமெடியனாகவே நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தில் சூரி சிக்ஸ்பேக் வைத்திருப்பதாக, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற சீமராஜா டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது சிக்ஸ்பேக் அனுபவம் குறித்து கூறிய சூரி, படத்திற்கு தேவை என்று இயக்குநர் சொன்னதால் சிக்ஸ்பேக் வைத்தேன், அதற்காக நான் பட்ட கஷ்ட்டம் ரொம்பவே பெருசு, என்று கூறினார்.
சூரி, சிக்ஸ்பேக் வைத்த தகவல் வெளியானாலும், அவரது சிக்ஸ்பேக் புகைப்படம் மட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், சீமராஜா படக்குழு இன்று சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
8 மாதத்தில் சூரி சிக்ஸ்பேக்கை வைத்துள்ளார். அதற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட அவரது இத்தகைய உழைப்பை சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
இதோ சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படம்,