மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு! - இந்த நடிகையை திருமணம் செய்ய போகிறாரா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், நடிப்பதோடு சொந்தமாக படங்கள் தயாரிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, இவர் தனது மனைவி ரஜினியை சமீபத்தில் விவாகரத்து செய்தார்.
காதலித்து ரஜினியை திருமணம் செய்த விஷ்ணு விஷாலுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கும் போது, அவரது இந்த திடீர் முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ‘ராட்சசன்’ படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்த விஷ்ணு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்கியதால், அவரது வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு அதுவே விவாகரத்துக்கு காரணமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமலா பாலை விஷ்ணு விஷால் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.
ஆனால், இதை மறுத்திருக்கும் விஷ்ணு விஷால், ’ராட்சசன்’ படம் வெளியான போது விவாகரத்து குறித்து வெளியே தெரிந்ததால், இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அமலா பால் எனது சிறந்த நண்பர் அவ்வளவு தான், என்று கூறியிருக்கிறார்.