Sep 03, 2018 09:04 AM

”சரிபட்டு வர மாட்டேன்” என்று கூறிய நடிகை - அட்ஜெஸ்ட் செய்ய வைத்த இயக்குநர்!

”சரிபட்டு வர மாட்டேன்” என்று கூறிய நடிகை - அட்ஜெஸ்ட் செய்ய வைத்த இயக்குநர்!

சிம்புவின் ‘மன்மதன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மந்த்ரா பேடி, சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்.

 

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் மந்த்ரா பேடி நடித்திருக்கிறார். முதலில் இந்த வேடத்தில் விஜயசாந்தியை நடிக்க வைக்க இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் அரசியலில் பிஸியாக இருப்பதால், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டதாம். பிறகு யாரை இந்த வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று அவர் யோசித்த போது, மந்த்ரா பேடி உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கிறார். உடனே அவர் இந்த வேடத்திற்கு சரியாக இருப்பார், என்று நினைத்தவர் அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

 

ஆனால், ’அடங்காதே’ படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூறிய மந்த்ரா பேடி, தான் தென்னிந்திய படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார். உடனே, திரைக்கதையை அனுப்புகிறேன், படித்து பார்த்துவிட்டு முடிவை சொல்லுங்கள், என்று கூறி இயக்குநர் திரைக்கதையை அவருக்கு அனுப்பு வைத்திருக்கிறார்.

 

Mandira Bedi

 

திரைக்கதையை படித்து பார்த்த மந்த்ரா பேடி, நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, சம்பள விஷயத்திலும் அட்ஜெஸ்ட் செய்ததாக இயக்குநர் ஷண்முகம் தெரிவித்திருக்கிறார்.

 

பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் போது கூடுதல் சம்பளம் கேட்டு அடம்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மந்திரா சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.