Jan 02, 2019 03:36 AM

நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்! - மாப்பிள்ளை இவர் தான்

நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்! - மாப்பிள்ளை இவர் தான்

லண்டனை சேர்ந்த மாடலான எமி ஜாக்சன், ‘மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய், ரஜினிகாந்த், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

 

தற்போது ஹாலிவுட் சீரியலில் நடிப்பதால் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள எமி ஜாக்சன், தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை.

 

இதற்கிடையே, ஹாலிவுட் சினிமாவை டார்கெட் செய்யும் எமி ஜாக்சன், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், எமி ஜாக்சனுக்கும் அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

 

ஜாம்பியா நாட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் குறித்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கும் எமி ஜாக்சன், பெரிய வைர மோதிரம் அணிந்துக்கொண்டு தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஜார்ஜ் பனயிட்டோ தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Amy Jackson Engagement