Dec 26, 2018 08:52 AM

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! - காரணம் இது தான்

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! - காரணம் இது தான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன் தம்பி மற்றும் அவர்களது மனைவிகளை சுற்றி நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த சீர்யல் தொடங்கி மக்களிடம் வரவேற்பு பெறும் நிலையில், சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த கவிதா திடீரென்று வெளியேறியுள்ளார்.

 

பல சீரியல்களில் நடித்தவர்கள் பலர் இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில், கவிதா இதில் நடித்தது போல காட்டி வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிப்பதை பார்க்கும் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து தான் வெளியேறியது குறித்து விளக்கம் அளித்திருக்கும் கவிதா, ”கன்னடத்தில் தொடங்க இருக்கும் புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் களந்துக்கொள்ள இருப்பதால் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து வெளியேறினேன். மற்றொரு புதிய தமிழ் சீரியலில் என்னை விரைவில் பார்க்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.