Mar 11, 2021 04:05 AM

”வட போச்சே...” - ஏமாற்றத்தில் நடிகை குஷ்பு

”வட போச்சே...” - ஏமாற்றத்தில் நடிகை குஷ்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் யார் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

 

இதற்கிடையே, சென்னையின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளின் பா.ஜ.க தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்ட குஷ்பு, இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருந்ததோடு, அதற்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தார்.

 

சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் வீடு வீடாக சென்று பா.ஜ.க-வுக்கு அதரவு திரட்டி வந்த நடிகை குஷ்பு, பெண்களுடன் சகஜமாக பேசுவது, நடனம் ஆடுவது என்று சினிமாவில் செய்த அனைத்தையும் அங்கேயும் செய்து மக்களை கவர்ந்து வந்தார்.

 

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கவில்லை என்றாலும், திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கத்தில் தன்னை தான் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பம்பரமாக சுழன்று வந்த குஷ்புவுக்கு அதிர்ச்சியளிப்பது போல், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளை பா.ம.க-வுக்கு வழங்கியிருக்கிறது அதிமுக.

 

அதிமுக-வின் இந்த அறிவிப்பால் பா.ஜ.க-வும், நடிகை குஷ்புவும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.