Dec 27, 2018 06:19 AM
55 வயது முதியவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை லட்சுமி மேனன்!

55 வயது முதியவரை நடிகை லட்சுமி மேனன் திருமணம் செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்திருக்கிறது.
37 வயதாகும் லட்சுமி மேனன், பிரபல மாடலாக இருப்பதோடு இந்தி சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையே, விளம்பர பட இயக்குநரும் தொழிலதிபருமான 55 வயதான சுகல் சேத்துடன் நட்பாக பழகிய லட்சுமி, நாளடைவில் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். இவர்கள் இருவரது காதல் குறித்தும் பல தகவல் வெளியானதோடு, சுகல் சேத் மீ டூ புகாரிலும் சிக்கினார்.
இந்த நிலையில், சுகல் சேத், நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்துகொண்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர்களும், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டார்கள்.