Dec 27, 2018 02:55 AM

காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மடோனா சபேஸ்டியன்!

காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மடோனா சபேஸ்டியன்!

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். நடிப்பதோடு சில படங்களில் பாட்டு பாடவும் செய்கிறார்.

 

இந்த நிலையில், நடிகை மடோனா செபஸ்டியன், இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”இவர்தான் உங்கள் காதலரா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

ரசிகர்களின் இந்த கேள்விக்கு வெறும் புகைப்படம் மட்டும் காரணமல்ல, அந்த புகைப்படத்துடன், ”சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது என் அதிர்ஷ்டம்” என்று மடோனா பதிவிட்டுள்ளார்.

 

Madona Sebastian

 

இந்த பதிவை பார்த்ததும், ரசிகர்கள் மடோனாவிடம் காதல் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள். இருப்பினும் இது குறித்து மடோனா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.