Apr 28, 2020 01:41 PM

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட தம்பி! - சோகத்தில் மாளவிகா மோகனன்

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட தம்பி! - சோகத்தில் மாளவிகா மோகனன்

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அப்படத்தில் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்தவர், தற்போது விஜயின் ‘மாஸ்டர்’ படம் மூலம் கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார்.

 

மாளவிகா மோகனன் என்றாலே, அவர் அவ்வபோது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தான் கண் முன் வந்து போகும். அந்த அளவுக்கு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மட்டும் இன்றி படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் அவர் தற்போது பெரும் சோகத்தில் இருக்கிறார்.

 

ஊரடங்கினால் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் பலர் அங்கேயே சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார்கள். நடிகர் விஜயின் மகன் கூட கனட நாட்டில் சிக்கிக் கொண்டு இந்தியா வர முடியவில்லை.

 

இந்த நிலையில், நடிகை மாளவிகாவின் தம்பியும் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டிருப்பதோடு, அங்கே உணவு இல்லாமல் கஷ்ட்டப்பட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா லண்டனில் படித்து வருகிறார். கல்லூரி அருகே ரூம் எடுத்து நண்பர்களுடன் அவர் தங்கி இருக்கிறாராம். ஊரடங்கு காரணமாக அவருடன் தங்கியிருந்த பிற நாட்டு மாணவர்கள், அவர் அவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட, ஆதித்யாவால் இந்தியாவுக்கு வர முடியவில்லையாம். இதனால், அங்கேயே இருக்கிறாராம்.

 

அவர் ரூமில் சமைப்பதற்கான வசதி இல்லாததோடு, அங்கே வெளியே விற்கப்படும் உணவுகளில் சுகாதாரமும் இல்லையாம். இதனால் சரியான உணவு இன்றி தவிக்கும் அவர், டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறாராம்.

 

Malavika Mohanan and Brother

 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மாளவிகா மோகனன், தனது தம்பியின் நிலையை எண்ணி குடும்பமே பெரும் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.